குற்றம்
கொழும்பில் கோர விபத்து – காவல்துறை பரிசோதகர் ஒருவர் பலி
ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (28) காலை மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த காவல்துறை பரிசோதகரை எதிரே வந்த பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் படுகாயமடைந்த காவல்துறை பரிசோதகர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம காவல்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பிரதான பரிசோதகரான, பாணந்துறையைச் சேர்ந்த ஜகத் சமிந்த பெரேரா என்ற 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login