ஏனையவை
தமிழ் கிரிக்கெட் வீரருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
தமிழ் கிரிக்கெட் வீரருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பில் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு விஜயகாந்த வியாஸ்காந்திற்கு கிடைத்துள்ளது.
சீனாவில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் 22 வயதுடைய யாழ்.மத்திய கல்லூரியின் பழைய மாணவன் வியாஸ்காந்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 முதல் ஒக்டோபர் மாதம் 08 வரை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் (2020.12.04) இல் 2020 லங்கா பிரிமியர் லீக் சுற்றில் யாழ்ப்பாணம் அணிக்காக தனது முதலாவது T20 போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இலங்கை கிரிக்கெட் அணியில் களமிறங்கும் வியாஸ்காந்த் - tamilnaadi.com