உலகம்

இரண்டு எதிரிகளுடன் சண்டை!! சொந்த நாட்டு ராணுவத்தால் துஸ்பிரயோகத்திற்கு இரையாகும் உக்ரைன் பெண் வீரர்கள்

Published

on

இரண்டு எதிரிகளுடன் சண்டை!! சொந்த நாட்டு ராணுவத்தால் துஸ்பிரயோகத்திற்கு இரையாகும் உக்ரைன் பெண் வீரர்கள்

உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள், அதிகாரிகளால் துன்புறுத்தல்களுக்கு இரையாவதாகவும், தங்கள் சொந்தப் படைகளுக்கு உள்ளேயே போரிடும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

100க்கும் மேற்பட்ட பெண் வீரர்கள்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த இந்த 18 மாதங்களில், 100க்கும் மேற்பட்ட பெண் ராணுவ வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

மொத்தம் 60,000 பெண்கள் உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றி வந்தாலும், களத்தில் 5,000 பெண் வீராங்கனைகள் மட்டுமே போரிட்டு வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 42,000 க்கும் அதிகமானோர் இராணுவ நிலைகளில் உள்ளனர்.

உக்ரைன் சட்டத்தின் கீழ் கீழ் எந்த பெண்ணையும் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி பணியில் ஈடுபடுத்த முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் சுய விருப்பத்துடனே போருக்கு முன்வந்துள்ளதாக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, பெண்கள் போர் களத்திற்கு தகுதியானவர்கள் அல்ல என்ற கருத்து, தற்போதும் உக்ரைன் ராணுவ அதிகாரிகளிடம் இருப்பதாகவும், பெண்கள் சமையல் செய்ய மட்டுமே தகுதியானவர்கள் என பல ஆண்கள் கருதுவதாக எவ்ஜெனியா என்ற வீராங்கனை தெரிவித்துள்ளார்.

கணவர்களைக் கண்டுபிடிக்கவே
அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், தம்மால் சமையலறையிலும், அதே வேளை உங்களைவிட போரிலும் சாதிக்க முடியும் என பதிலளித்ததாக குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, பெண்கள் தங்கள் கணவர்களைக் கண்டுபிடிக்கவே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதாக பொதுமக்களிடம் ஒரு வலுவான கருத்து இருப்பதாக வெலைகா எவ்ஜெனியா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

உடல் ரீதியான துன்புறுத்தல்கள் நடந்தேறுவது தொடர்பிலும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர். ஆனால் உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவிக்கையில்,

பல்லாயிரக்கணக்கான வீராங்கனைகள் ராணுவத்தில் சேர்ந்துள்ள நிலையில், மிகச்சில நேரங்களில் இது போன்ற புகார்கள் எழுகின்றன என குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு, அவர்களுக்கு என தனியாக சீருடை வழங்கப்படவில்லை.

ஆண்கள் பயன்படுத்தும் உள்ளாடை முதற்கொண்டு, பொருத்தமற்ற காலணிகள், குண்டு துளைக்காத உள்ளாடைகள் வரையிலும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், ராணுவத்தில் உள்ள பெண்கள், அவர்களுக்குப் பொருத்தமான சீருடைகளை, ஆடைகளை வாங்கவேண்டும் என்றால் அவர்கள் சொந்த பணம் செலுத்திவாங்கிக் கொள்ளலாம் அல்லது தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வாங்கிக்கொள்ள மட்டுமே முடியும் எனவும், வேறு வழியில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

பெண் வீரர்கள் பலர், தற்போது தங்கள் சொந்த பணத்திலேயே சீருடைகள், காலணி உள்ளிட்ட தேவையானவற்றை வாங்குவதாக தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, களத்தில் இருக்கும் மருத்துவர்களும் மகளிர் மருத்துவத்தில் பயிற்சி பெற்றவர்களல்ல என்ற குறையும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

1 Comment

  1. Pingback: இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய 3 கப்பல்கள் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version