உலகம்

இது படமே இல்ல!.. மாமன்னன் படத்தை விமர்சனம் செய்த நடிகர் சிவகுமார்

Published

on

இது படமே இல்ல!.. மாமன்னன் படத்தை விமர்சனம் செய்த நடிகர் சிவகுமார்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த ஜூன் 29-ம் தேதி வெளிவந்த மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.

இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் எனப் பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படம் OTT தலத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பேசும் பொருளாய் மாறியுள்ளது.

இந்நிலையில் மாமன்னன் படத்தை பார்த்த நடிகர் சிவகுமார், “தம்பி மாரி செல்வராஜ்க்கு!. நான் மாமன்னன் படத்தை பார்த்தேன். இது படமில்லை. உங்கள் வாழ்க்கையில் நடந்த வலி.பாதிக்கப்பட்டவன் தான் இவ்வளவு ஆழமாக சொல்ல முடியும்.”

“திரைப்படம் மூலம் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தி அதிகம் இருக்கிறது. உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன்.விரைவில் சந்திப்போம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ” நன்றி சார்”என்று” பதிவிட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version