ஏனையவை

பாக்கு நீரினையை நீந்திக் கடந்த மாணவன்!! குவியும் பாராட்டு!!

Published

on

பாக்கு நீரினையை நீந்திக் கடந்த மாணவன்!! குவியும் பாராட்டு!!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த தவேந்திரன் மதுஷிகன் இளம் வயதில் பாக்கு நீரினையை நீந்தி சாதனைப்படைத்துள்ளார்.

இந்த முயற்சிக்கு 231 வது இராணுவ படைப்பிரிவினால் நேற்று (03.04.2023) கல்லடி இராணுவ முகாமில் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த மாணவனின் சாதனையினை பாராட்டி மட்டக்களப்பு பாடுமீன் கழகத்தின் தலைவர் புஸ்பாகரனினால் பணப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பிறிகேட் கொமாண்டர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இணைந்து நினைவுச்சின்னமொன்றினை வழங்கி கௌரவமளித்துள்ளனர்.

இவர் தனது சாதனை நீச்சல் பயணத்தில் 30 கிலோமீற்றர் தூரமுடைய பாக்கு நீரினையை சுமார் 12 மணித்தியாலம் 58 நிமிடங்களில் நீந்திக் கரை சேர்ந்துள்ளார்.

இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடைந்துள்ளார்.

இவர் இதுவரை நீச்சல் திறமைக்காக 12 பதக்கங்களை வென்றெடுத்துள்ளதுடன், இலங்கை சாரணியப் படையில் இணைந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர்.சுஜாதா குலேந்திரகுமார், பாடுமீன் கழகத்தின் தலைவர் புஸ்பாகரன், புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர், மாவட்ட சாரண ஆணையாளர் வீ.பிரதீபன், மதுஷிகனின் பெற்றோர், மாவட்ட ஊடக பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட சாரண ஆசிரியர்கள், சாரண மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version