ஏனையவை

எறும்பு தொல்லை அதிகமாக இருக்கா? அதனை விரட்ட இதோ சில எளிய வழிகள்

Published

on

பொதுவாக எறும்பினங்கள் வீட்டில் படையெடுத்து வந்தாலே அது தொல்லை தருவதாக இருக்கும்.

எறும்புகள் உங்கள் முழு வீட்டிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன் சில வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்தலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • ஒரு பாட்டிலில் , 1: 2 விகிதத்தில் டிஷ் வாஷ் சோப்பு மற்றும் தண்ணீரை எடுத்து நிரப்பிக்கொள்ளவும். இரண்டையும் நன்றாகக் குலுக்கி ஒரு போம் கரைசலை உருவாக்கி எறும்புகள் மீது தெளிக்கவும். இதனால் எறும்புகள் மூச்சு விட சிரமப்பட்டு ஓடும் அல்லது இறந்து விடும். இறந்த எறும்புகளை ஈரமான துணி கொண்டு துடைத்துச் சுத்தம் செய்து விடுங்கள்.
  • வினிகரினாலான இயற்கையான பூச்சிக்கொல்லியை உங்கள் கதவுகளைச் சுற்றி, ஜன்னல்கள் மற்றும் எறும்புகளை நீங்கள் காணும் மற்ற இடங்களில் தெளிக்கவும். இந்தக் கரைசலைக் கொண்டு ஜன்னல்கள், மாடிகள் மற்றும் பிற பகுதிகளைச் சுத்தம் செய்யலாம். வினிகர் கொண்டு சுத்தம் செய்த இடங்களில் எறும்புகளின் எண்ணிக்கை குறைவதை கண்கூடாகக் காணலாம்.
  • 3 பங்கு எலுமிச்சை சாற்றை எடுத்து 1 பகுதி தண்ணீரில் நன்றாக கலக்குங்கள். இந்தக் கரைசலை எறும்புகள் வரிசையின் மீது அல்லது அது வரும் பாதையின் மீது தெளித்து விடுங்கள்.
  • பேக்கிங் சோடா மற்றும் டிஷ் சோப்பை சிறிய அளவு எடுத்து அதன் மூலம் ஒரு கரைசலை உருவாக்கி , எறும்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதை ஸ்ப்ரே செய்யலாம்.
  • 1 தேக்கரண்டி அளவுள்ள சர்க்கரை, வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் போரக்ஸ் பௌடரைச் சேர்த்து ஒரு கலவையைத் தயார் செய்யவும். இந்தக் கலவையை ஒரு கிண்ணத்தில் நிரப்பி எறும்புகளின் வழியில் வைத்து அவற்றைத் தெறிக்க விடுங்கள்.
  • ஒரு கப் தண்ணீரில் 10 சொட்டு எசன்சியல் எண்ணெய் சேர்த்து எறும்புகளின் மீது தெளியுங்கள். அல்லது, பருத்தி பஞ்சில் இந்த எண்ணெயை ஒரு சில துளிகள் ஊற்றி எறும்புகள் படையெடுக்கும் பகுதிகளில் வைக்கவும்.
  • நீங்கள் சிடர் ஆயில், லாவெண்டர் ஆயில், யூகலிப்டஸ் எண்ணெய், மிளகுத்தூள் எண்ணெய் மற்றும் எலுமிச்சை எண்ணெய் போன்ற எசன்சியல் எண்ணெய்களை இதற்குப் பயன்படுத்தலாம்.
  • சிவப்பு மிளகாய்த் தூளை சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்டாக உருவாக்கவும். எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தவும். அல்லது , எறும்புகள் வருகிற இடங்களில் நேரடியாக மிளகாய்த் தூளைத் தூவி விடுங்கள்.
  • ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீரை நிரப்பவும். 1½ தேக்கரண்டி டிஷ் சோப் மற்றும் 1 தேக்கரண்டி ரப்பிங் ஆல்கஹாலை அதில் கலக்கவும். இக்கலவையை நன்றாக குலுக்கவும். உங்கள் வீட்டில் நுழையும் எறும்புகள் மற்றும் எங்கிருந்து எறும்புகள் வருகிறதோ அந்தப் பகுதிகளில் இதைத் தெளிப்பதன் மூலம் எறும்புகளை ஓட ஓட விரட்டலாம்.
  • காபி தூளை எறும்புப்புற்றின் மீது தூவி விடுங்கள். அதை எடுத்துச் சாப்பிட முயற்சிக்கும் எறும்புகள் காஃபின் பாதிப்புக்குள்ளாகும்.

#antinfestation #home #garden

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version