ஏனையவை

வீட்டில் கரப்பான்பூச்சி தொல்லையா? இதனை விரட்ட இதோ சில வழிகள்

Published

on

பொதுவாக பலரது வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாகவே காணப்படும். இது பலருக்கு தொல்லையாகவே இருக்கும்.

கரப்பான்பூச்சிகளை எளிதில் விரட்ட ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் உங்கள் வீட்டில் கரப்பான்பூச்சிகளே இருக்காது. தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம்.

  • கரப்பான்பூச்சிகளுக்கு அசுத்தமான இடங்கள் பிடிக்கும் என்பதால், குறிப்பாக உணவுக் குப்பைகளை போடும் குப்பைத் தொட்டியை தினமும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.
  • கரப்பான்பூச்சிகளை விரட்ட ஒரு பாட்டில் ஹேர் ஸ்ப்ரே இருந்தால் போதும். அதற்கு அந்த ஹேர் ஸ்ப்ரேயை கரப்பான்பூச்சியின் மீது தெளித்தால், அதனால் நகர முடியாது.
  • உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகள் எவ்விடத்தில் அதிகம் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களோ, அவ்விடத்தில் பிரியாணி இலையை நொறுக்கிப் போடுங்கள்.
  • அம்மோனியாவால் கரப்பான்பூச்சி அதிகம் சுற்றும் பகுதிகளை சுத்தம் செய்யுங்கள். அதற்கு 2 கப் அம்மோனியாவை ஒரு வாளி நீரில் கலந்து, சுத்தம் செய்யுங்கள். இதனால் கரப்பான்பூச்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
  • இரண்டு பக்கம் ஒட்டும் நல்ல தரமான டேப்புகளை வாங்க வேண்டும். பின் அதை ஒரு போர்டில் ஒட்டி, இரவு தூங்க செல்லும் முன் கரப்பான்பூச்சி அதிகம் சுற்றும் இடத்தில் வையுங்கள். ஏனெனில் நாம் தூங்க சென்ற பின்பு தான் கரப்பான்பூச்சிகள் வெளியே வரும். எனவே இச்சமயத்தில் செய்வதே நல்லது.

#LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version