ஏனையவை

விமானத்தில் அதிரடியாக மோதிக்கொண்ட பயணிகள் (வீடியோ)

Published

on

விமானத்தில் இரண்டு பயணிகள் சரமாரியாக மோதிக் கொண்டமையானது பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா- லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவிலிருந்து டென்னசி, மெம்பிஸ் நகருக்குச் சென்ற டெல்டா பயணிகள் விமானத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானத்தை விட்டு இறங்குவதற்கு பயணிகள் தயாரான போதே, இரண்டு பயணிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கியமையால் பரபரப்பு ஏற்பட்டது,

இதனை அவதானித்த ஏனைய பெண் பயணிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். அத்துடன் தாக்கிக் கொண்ட இரு பயணிகளையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.
எனினும், அங்கிருந்த பயணிகள் இருவரையும் தடுத்து சண்டையை நிறுத்தியுள்ளனர்.

இதேவேளை பயங்கர வார்த்தை மோதல் இறுதியில் கைகலப்பில் முடிந்தது என நேரில் பார்த்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version