வீடு - தோட்டம்

வீட்டில் பூச்சி தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமா?

Published

on

வீட்டில் தொல்லை செய்யும் பூச்சிகளை விரட்ட, இயற்கையான எளிய வழிகள் உண்டு. இதற்காக பணத்தை செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஒரு சில வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • நான்கைந்து பூண்டு விழுதுகளை எடுத்து நசுக்கி, சுடுநீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரை உங்கள் வீடு முழுக்க தெளித்தாலே போதும், கொசு தொல்லை உங்கள் வீட்டில் இருக்காது. பூண்டின் வாசம் நன்கு இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.
  •  எறும்பு எல்லா காலத்திலும் வீட்டை சுற்றி இருக்கும். நீங்கள் அடுத்த முறை உங்கள் வீட்டில் எறும்பை கண்டால் செய்ய வேண்டியது, வெள்ளை வினிகரை எறும்புகள் இருக்கும் இடத்தில தெளித்தல். இது எறும்புகளை தடுக்கும் ஓர் சிறந்த இயற்கை பொருள் ஆகும்.
  • கோதுமை மாவுடன், கொஞ்சம் போரிக் பவுடரும், சிறிதளவு நீரும் சேர்த்து கலந்து உருண்டை பிடித்து கரப்பான்பூச்சி இருக்கும் இடத்தில வைத்துவிட்டால், கரப்பான் பூச்சி தொல்லை முழுமையாக அழிந்துவிடும்.
  • எலுமிச்சை, சாத்துக்கொடி, ஆரஞ்சு போன்றவற்றின் தோல்களை சிலந்தி இருக்கும் இடத்தில தேய்த்தாலே, சிலந்தி வராது, முற்றிலுமாக அழிந்துவிடும்.
  • வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஓர் கிண்ணத்தில் கர்பூரங்களை போட்டு வைத்துவிட்டால், ஈக்களின் தொல்லையே இருக்காது.

#Hometips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version