மருத்துவம்

எலும்புபுரை நோயில் பாதுகாப்பது!

Published

on

எலும்புபுரை நோயில் பாதுகாப்பது!

ஓஸ்டியோபோரோஸிஸ்’ என்பது எலும்பு புரை நோய். இந்த நோய் எலும்பை கொஞ்சம், கொஞ்சமாக உருக்குவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. அவற்றோடு கழுத்து மற்றும் முதுகுவலியையும் உருவாக்கும்.

மனித உடலில் உள்ள எலும்புகள் வலுவாக இருந்தால்தான் உடல் உறுதியாக இருக்கும். எலும்புகள் அடர்த்தி குறைந்தாலோ, தேய்மானம் அடைந்தாலோ உடல் வலுவின்றி உயிர் இருந்தும் இல்லாததுபோல் ஆகிவிடும்.

இந்த ‘ஓஸ்டியோபோரோஸிஸ்’ நோய் ஆண்களை காட்டிலும் பெண்களையே அதிக அளவில் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக 40 வயதை கடந்த பெண்கள் மாதவிடாய் இறுதி நாட்களின்போது அதாவது ‘மெமோபாஸ்’ காலகட்டத்தில் இருக்கும் பெண்களையே இது அதிக அளவில் பாதிக்கிறது.

ஆரம்பகட்ட அறிகுறிகளை தெரிந்து கொண்டவுடன் உடனடியாக அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக 40 வயதை கடந்த ஆண், பெண் என இரு பாலரையும் எலும்பு புரைநோய் அதிகம் தாக்குகிறது.

மூன்றில் ஒரு பெண்ணுக்கும், ஐந்தில் ஒரு ஆணுக்கும் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு சொல்கிறது. மாதவிலக்கு பிரச்சினை உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பையை நீக்கும்போது ஹார்மோன் சுரப்பிகள் சுரக்காமல் நின்று விடும்.

அப்போது பெண்களுக்கு இந்த எலும்பு புரை நோய் ஏற்படும். நம் அன்றாட வாழ்வில் எளிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் எலும்பு புரை நோயை கட்டுப்படுத்தலாம். அதிகாலை வெயில் உடலில் படும்படி இருந்தால், வைட்டமின் ‘டி’ சத்து உடலுக்கு கிடைக்கும்.

இதன் மூலம் செரிமான கோளாறு ஏற்படாது. எலும்புகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். உடல் உழைப்பு இல்லாதவர்கள் நடைப்பயிற்சி செய்வது, தண்டால் எடுப்பது உள்ளிட்ட எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். இதுதவிர பச்சை காய்கறிகளை சாப்பிடலாம்.

ராகி, கேப்பை உள்ளிட்ட கால்சியம் சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எலும்பு புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர்களின் ஆலோசனைப்படி வைட்டமின் ‘டி’, கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

#helthy

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version