மருத்துவம்

மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி!

Published

on

மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி!

உடல், மனம் என இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு மனப்பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். மனப்பதற்றத்தை தணிப்பதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது, வாழ்க்கை முறையில் மாற்றங்கள்.

உடல் எடை அதிகமாக இருந்தால் எடையைக் குறைத்தாலே பாதிப் பிரச்சினைகள் சரியாகும். தவறாமல் உடற்பயிற்சி செய்தாலே, மனப்பதற்றமும் மனச் சோர்வும் வெகுவாக குறையும். ஆரோக்கியமான, உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம்.

குறிப்பாக யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவை பயன்தரும். காபி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்துவதும் மனப்பதற்றத்தை அதிகரிக்கும். அவற்றைக் குறைத்துக்கொண்டு நிறைய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள். சிறு விஷயங்களுக்குக்கூட பதற்றப்பட்டு பதற்றப்பட்டு, பின்னர் அதுவே ஒரு பழக்கமாக ஆகிவிடும்.

பிறகு பல நேரம் நம்மை அறியாமலேயே பதற்றம் வந்துவிடும். ஒரு விஷயம் நடந்துவிடுமோ என்று நாமே கற்பனை செய்வதால், எதுவும் நடக்கப்போவதில்லை, ஏன் பதற்றப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் இருந்தாலே பதற்றம் வராது. இந்த வழிமுறைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். அவற்றைச் செயல்படுத்துவதில்தான் சூட்சுமம் இருக்கிறது.
#helthy

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version