மருத்துவம்

வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்!

Published

on

ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள், 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை உள்ளது. வாழைப்பழம், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதை தீர்மானிப்பது அதன் பழுத்த நிலை மற்றும் நாம் சாப்பிடும் வாழைப்பழங்களின் எண்ணிக்கை ஆகும்.

பொதுவாக பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பி6, பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை நிரம்பியுள்ளது.

பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை தாமதப்படுத்தும் நார்ச்சத்து கூடுதலாக இருப்பதாலும் நீரிழிவு நோயாளிகள் பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு சற்று அதிகம். வாழைப்பழத்தில் அதிகமான அளவு பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக உள்ள செவ்வாழை, நேந்திரம், பச்சை வாழை போன்ற வாழை வகைகளை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒரு சிறிய வாழைப்பழம் சாப்பிடலாம்.

பூவம்பழம், ரஸ்தாளி போன்ற வாழைப்பழ வகைகளை தவிர்ப்பது நல்லது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் ரத்த கொதிப்பை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

#helthy

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version