மருத்துவம்

நீரிழிவு நோயாளிகளுக்கு பொருத்தமான பழங்கள்….

Published

on

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அது சில நேரம் எதிர்மறையாகி விடுகிறது.

நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்த வரை, ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது. முன்னெச்சரிக்கையாக சில பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், ரத்தச் சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக்கூடிய பழங்களும் உள்ளன.

ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இந்தப் பழங்களைச் சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் கிளைசமிக் இன்டக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) மற்றும் கிளைசமிக் லோடு (கிளைசமிக் சுமை) குறைவாக உள்ள பழங்களை தாராளமாக உண்ணலாம். எடுத்துக்காட்டாக ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, கொய்யா, நாவல் பழம், கிவி பழம், செர்ரிபழம், பீச்பழம், பெர்ரிபழம்,அத்திப்பழம் வெண்ணை பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை உண்ணலாம்.

சர்க்கரை நோய்க்கும் குதிகால் வலிக்கும் தொடர்பு உண்டு. நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் ஆகியோருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத பொழுது குதிகால் வலி ஏற்படலாம்.

இதற்கு முக்கிய காரணம் ‘பிளாண்டர் பேசியைடிஸ்’. குதிகால் எலும்பில் பிளாண்டர் பேசியா இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு குதிகால் வலி உண்டாகலாம். மேலும் சர்க்கரை நோயாளிகள் குதிகால் உயரமான காலணிகள் மற்றும் கூம்பு வடிவ ஷூக்களை அணியக்கூடாது.

#Health

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version