மருத்துவம்
நாட்டு சர்க்கரை எடுத்து கொள்வது இத்தனை நன்மைகளை தருமா?
வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும் நாட்டுச் சர்க்கரையில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க நினைப்போர் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துதல் நல்லது.
வைட்டமின் பி6, நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்றவை உள்ளன. இது உடலுக்கு ஏராளமான மருத்துவப்பயன்களை தருகின்றது.
இதனை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- சருமத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் நாட்டுச் சர்க்கரையில் அடங்கியுள்ளன. இது சரும செல்களுக்கு புத்துணர்ச்சியூட்டவும், இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது.
- நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தி சருமத்தை ஸ்க்ரப் செய்வது, இறந்த செல்கள், சரும துளைகள் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் தூசுக்களை அகற்றி, பளபளப்பான சருமத்தை பெற உதவும்.
- உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் இனிப்புகளை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்க்கலாம். இதில் குறைந்த அளவில் கலோரிகள் உள்ளதால் உடல் எடை குறைய உதவுகிறது.
- வெள்ளை சர்க்கரையில் உள்ள சில வேதிப்பொருள்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
You must be logged in to post a comment Login