மருத்துவம்
வெந்தயத்தை இப்படி எடுத்து கொண்டால் உடலில் உள்ள பாதி பிரச்சினை குறையுமாம்!
வெந்தயத்தை முளைகட்ட வைத்து, அதை சாலட், பராத்தா, சான்விஞ்சில் சேர்த்து சாப்பிடலாம். பொடி செய்த வெந்தயத்துடன், பாகற்காயின் விதைகளை சம அளவில் பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறையும்.
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.
வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் அரைத்து தரைமுடியின் அடிக்கால்களில் தடவி அரை மணிநேரம் வைக்க வேண்டும். பின் குளிக்க வேண்டும். இதனால் பொடுகு குறையும். முடி உதிர்வது நிற்கும். தலைமுடி அடர்ந்து வளரும்.
ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் வெந்நீரில் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும். சுவைக்காக எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை தேன் சேர்த்து வடிகட்டி, சூடான தேநீராக பருகலாம்.
You must be logged in to post a comment Login