மருத்துவம்

ஒருவரை நாய் கடித்து விட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்? அவசியம் தெரிஞ்சிகோங்க

Published

on

ஒருவரை நாய் கடித்தால் மருத்துவமனைக்குச் செல்லும் முன் உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவி  என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

  1. நாய் கடித்த காயமோ அதன் தடமோ உள்ள இடத்தில், விரல்களால் வைத்து மெல்ல அழுத்துங்கள்.
  2. கடிபட்ட இடத்தில் குழாய் நீரை திறந்துவிட்டு 5 நிமிடங்கள், அதாவது இரத்த, வெளியேறும் வரை கழுவுங்கள். (கழுவுவதற்கு ஆக்கஹால் செட்ரி மைடு கார்பாலிக் அமிலம் அல்லது சோப் உபயோகிக்கலாம்)
  3. நாய் கடித்த இடத்தில் கட்டு போடக்கூடாது. சூரிய ஒளி படும்படி இருக்க வேண்டும்.
  4. சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றை தடவக்கூடாது.
  5. பின்னர் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி மட்டுமே உயிர் காக்கும்.
  6. நாய் கடித்த நாளான்று தடுப்பூசி போடுவதை 0 நாள் என்பர், பின்னர் 3, 7, 14, 28 என முறையே நாட்களை கணக்கிட்டு தடுப்பூசியை ஐந்து முறை செலுத்திக்கொள்ள வேண்டும்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version