மருத்துவம்

குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Published

on

குங்குமப்பூ. நல்ல நறுமணத்துடன் கூடிய ஒரு சுவையான மற்றும் விலை உயர்ந்த மசாலாவாக பொருளாகும்.

இது மட்டுமின்றி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. புற்றுநோய் உட்பட பிற நாட்பட்ட நோய்களை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

அந்தவகையில் குங்குமப்பூ தர கூடிய பிற ஆரோக்கிய நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

  • குங்குமப்பூ பார்வைத்திறனை பாதுகாப்பதோடு, விழித்திரையை சீரமைக்கவும் உதவும்.
  • குங்குமப்பூவில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வளமான அளவில் இருப்பதால், இவை செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
  • குங்குமப்பூ பாலுணர்வை தூண்டக்கூடியது. விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சினை உள்ள ஆண்கள் குங்குமப்பூவை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இது ஆணின் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்துகிறது. குங்குமப்பூவில் உள்ள க்ரோசின் படுக்கையில் ஆற்றலுடன் செயல்பட வைக்கக்கூடியது.
  • கர்ப்பமாக உள்ள பெண்கள் 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை சேர்த்துகொள்ளலாம்.
  • குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இரத்ததை சுத்திகரிக்கவும் உதவுகிறது. குங்குமப்பூ சாப்பிட்டால் இரத்த சோகை ஏற்படுவது குறையும்.
  • குங்குமப்பூவுடன் சிறிதளவு சந்தனம் மற்றும் 2 ஸ்பூன் பால் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவாக இருக்கும்
#HealthTips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version