மருத்துவம்

தினந்தோறும் சிறிதளவு தேன் சாப்பிடுதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Published

on

நமக்கு இயற்கை அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்.

இதில் 70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது.

பல நோய்களுக்கு அருமருந்தாகும் இந்த தேனை தினமும் சிறிதளவு குடிப்பதனால் பல நன்மைகள் வந்து சேருகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.

  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன்பாக ஒரு டீஸ்பூன் தேன் அருந்தி விட்டு தூங்கும் போது, உடலுக்குள் செல்லும் தேன் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.
  • ஜுரம், சளி போன்ற பாதிப்புகளால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் போது நெஞ்சில் சளி சேர்ந்து கடுமையான இருமல் ஏற்படுகிறது. இந்நேரங்களில் ஒரு டீஸ்பூன் தேன் அருந்துவதால் கடுமையான இருமல் குறையும். தொண்டைகட்டு மாற்று தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
  • கிரீன் டீயில் சிறிதளவு தேன் கலந்து தினமும் பருகி வருபவர்களுக்கு பொடுகு தொல்லை கூடிய விரைவில் நீங்கும். தலைமுடியின் பளபளப்பு தன்மையும் அதிகரிக்கும்.
  • தினமும் குழந்தைகளுக்கு தேன் சிறிதளவு கொடுத்து வருவது அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தும். குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.
  • கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.
  • இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.
  • தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.
  • தேனில் நமது ரத்தத்தில் இருக்கும் அணுக்களுக்கு புத்துணர்வை அளிக்கும் சக்தி நிறைந்துள்ளது. மேலும் நரம்புகளை பலப்படுத்தி மூளையின் செயல்பாடுகள் வேகம் பெற உதவுகிறது.
  • தேனை அனைவரும் தினந்தோறும் சிறிதளவு சாப்பிட்டு வருவதால் மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபகத்திறனும் அதிகரிக்கும்.

#Healthtips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version