மருத்துவம்

தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Published

on

ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
இதனை தினமும் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
அந்தவகையில் தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
  • ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அமுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுக்கிறது.
  • ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. இதில் உள்ள பொலேட் ஆண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்றி மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
  • வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும்.
  • தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
  • ஆரஞ்சு பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் ஏற்படுவது மிக குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் எனும் அமிலமாகும்.
  • உடலில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பினை கரைத்து வெளியேற்ற பெரிதும் பயன்படுகிறது.
  • ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது. மேலும் முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிபடுத்துகிறது.

#Healthtips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version