மருத்துவம்

உடல் எடையை குறைக்க சீரகத்தண்ணீர் உதவுமா?

Published

on

சீரகம் சமையலுக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதை பயன்படுத்துகின்றார்கள்.

முதல்நாள் இரவில் சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் ஏராளம்.

குறிப்பாக சீரகத்தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்று சொல்லப்படுகின்றது. தற்போது அது எப்படி என்பதை பார்ப்போம்.

  • உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் பலரும் பல செயல்முறைகளை பின்பற்றி இருப்பார்கள். அதற்கு சீராகத்தை தண்ணீருடன் சேர்த்து குடிக்க வேண்டும். இது உடல் எடை குறைய உதவுவதாக சொல்லப்படுகிறது.
  • சீரகத்தில் உடலை சுத்தப்படுத்தும் மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
  • சீரகத் தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்வதன் மூலம், உடலில் உள்ள அதிகப் படியான கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
  • சிலருக்கு அளவுக்கு அதிகமாக பசிக்கும் அத்தகையவர்கள் பசியை குறைப்பதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள்.
  • ஆனால் சீரகத் தண்ணீரில் இயற்கையாகவே பசியை அடக்கும் பண்பு உள்ளது. இதன் மூலம் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வதை குறைக்கலாம்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version