மருத்துவம்
இரவு நேரத்தி்ல் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! ஆபத்தை ஏற்படுத்தும்
பொதுவாக சிலவகை உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இரவு நேரத்தில் உட்கொள்ளும் உணவுகள் சில உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- இரவில் இறைச்சி சாப்பிடுவர்கள் வழக்கத்தை விட குறட்டை சத்தத்தை அதிகமாக வெளிப்படுத்துவார்கள். அதனால் இரவில் இறைச்சி உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
- இரவு நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும்.
- இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடும். அதனால் உடல் எடையும் அதிகரிக்கக்கூடும். உடலில் கார்போஹைட்ரேட் அளவை உயர்த்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
- இரவில் சாக்லேட் உட்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும்.
- இரவு நேரத்தில் மது அருந்துவது தூக்க முறையை முற்றிலுமாக மாற்றிவிடும். உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துவிடும்.
#lifestyle
You must be logged in to post a comment Login