மருத்துவம்

ஜலதோஷம் மற்றும் வறட்டு இருமலால் அவஸ்தையா? இதனை போக்க சில மருத்துவ குறிப்புகள் இதோ !!

Published

on

பனிக்காலம் துவங்கிவிட்டது. அதனால், மக்கள் பலரும் இருமல் தும்மல் ஜலதோஷம், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

வெயில் காலத்திலிருந்து திடீரென்று குளிர்காலத்திற்கு மாறும்பொழுது ஜலதோஷம் வருவது இப்பொழுது ஒரு சகஜமான சூழ்நிலை.

ஆனால் நம் அன்றாட வாழ்வில் இருமல் மூக்கடைப்பு சளி போன்ற உபாதைகள் இருந்தால் வெளியில் சென்று வேலை பார்ப்பது மிகவும் கடினம்.

இதனை ஒரு சில எளிய மருத்துவங்கள் மூலம் குணமாக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
  • கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.
  • முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.
  • நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணெய்யை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.
  • கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.
    நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
  • ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.
    இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.
  • ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

#colds #drycough #headache

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version