மருத்துவம்

வெந்தயத்தை ஊறவைத்து எடுத்து கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

Published

on

வெந்தயம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு வகையான வியாதிகளை போக்குவது வரைக்கும் இதன் பயன்கள் ஏராளம்.

வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன.

அதிலும் வெந்தயத்தை ஊறவைத்து எடுத்து கொள்வதனால் பல நன்மைகள் கிடைக்கின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.

  • வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை பருகலாம். வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
  • வெந்தயத்தை பாலில் ஊறவைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பேன், பொடுகு நீங்கும்.
  • வெந்தயத்தை வெந்நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர குடலில் ஜீரண சுரப்புகளை சீராக்கி வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
  • வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் ஊறவைத்து உடலில் தேய்த்து குளிக்க தோல் நோய்கள் நீங்கும். தலையில் தேய்த்து குளித்து வர பொடுகு நீங்கும். தலையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.
  • வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளித்து வர உடல் சூடு தணியும். முடி உதிர்வை நீக்கும். கண்களுக்கு குளிர்ச்சியை தரும். கண் பார்வை தெளிவு பெறும்.
  • வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து கழுவி வர முகப்பரு நீங்கும். முகம் பொலிவு பெறும்.
  • இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை மோரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி நீங்கும். அல்லது வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
#helathtips #hairtips 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version