மருத்துவம்
இதயப் பிரச்சினைகளைத் தடுக்கும் திராட்சை!!
இதய பாதிப்பு, இரத்தக் குழாய் பிரச்சினைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் திராட்சைப் பழத்திற்கு இருக்கிறது.
திராட்சையில் விட்டமின் சி, ஏ, கே, கரோட்டினாய்ட், பி காம்ப்ளெக்ஸ் விட்டமின்கள் ஓரளவுக்கு உள்ளன.
அதேபோல் தாமிரம், இரும்பு, மாங்கனீஸ் போன்ற தாது உப்புக்கள் இதில் நிறைவாகவுள்ளதுடன், செரிமானக் குறைபாட்டைப் போக்கும் தன்மையும் உள்ளன.
திராட்சையில் உள்ள ஒரு வகையான இரசாயனப் பொருள் குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயில் இருந்தும், இதய இரத்த குழாய் நோய்களில் இருந்தும், நரம்பு தொடர்பான பிரச்னைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.
இந்த இரசாயனப் பொருள் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைப்பதுடன், இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
அத்துடன் இரத்த குழாய்களை தளர்வுற செய்வதால், மாரடைப்புக்கான வாய்ப்பையும் தவிர்த்துவிடும் திறன் உள்ளது.
திராட்சையில் புளிப்புச்சுவை இருப்பதால் அசிடிட்டி, அல்சர், வாயுப் பிரச்னை, நெஞ்சு எரிச்சல் பிரச்சினை இருப்பவர்கள் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
#MedicineTips
You must be logged in to post a comment Login