மருத்துவம்

ஆரோக்கியமான வாழ்வுக்கு – தினமும் ஒரு துண்டு அன்னாசிப்பழம்

Published

on

ஆரோக்கியமான வாழ்வுக்கு – தினமும் ஒரு துண்டு அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் அனைவராலும் மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பழம். இதில் உள்ள பலவகைப்பட்ட தாதுப்பொருள்கள் மற்றும் விற்றமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் நுண்ணங்கித் தொற்றிலிருந்தும் உடலைப் பாதுகாக்கின்றன.

அன்னாசிப்பழத்தை உணவில் தொடர்ச்சியாக சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் காணப்படும் பல நோய்த் தாக்கங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

அவற்றில் சில உங்களுக்காக…..

  • இதயத்துக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
  • சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுப்பதோடு, சருமத்தை மிருதுவாகவும் பேண உதவுகிறது.
  • மலச்சிக்கலைத் தடுப்பதுடன், செரிமானப் பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது.
  • இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
  • ஈறுகளை வலுப்படுத்தி பற்களின் ஆரோக்கியத்தை வலுவாக வைத்திருக்கும். எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது.
  • ஆரோக்கியமான கண் பார்வைக்கு உதவுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version