Sweden – tamilnaadi.com

கொட்டித் தீர்க்க போகும் இடியுடன் கூடிய மழை
கொட்டித் தீர்க்க போகும் இடியுடன் கூடிய மழை

டிசம்பர் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (8.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவின் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை
உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை

சுவீடனில் (Sweden) சமீபத்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சச்சித்ரா ஹர்ஷனி ஜயகாந்த வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

40-44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் அவர் அந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது அவர் 5.24 மீட்டர் நீளம் தாண்டி இந்த பதக்கத்தை வென்றுள்ளார்.

சச்சித்ரா இலங்கை பொலிஸில் பணிபுரிகிறார்.

இந்நிலையில், மாஸ்டர்ஸ் போட்டி கடந்த ஆகஸ்ட் 13ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெற்றது.

இதில் 119 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டதுடன் அந்த போட்டியில் இலங்கையில் இருந்து 14 பேர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை விட்டு வெளியேற பணம் தரும் ஐரோப்பிய நாடு!
நாட்டை விட்டு வெளியேற பணம் தரும் ஐரோப்பிய நாடு!

ஸ்வீடன் (Sweden) தனது சொந்த குடிமக்களுக்கு நாட்டை விட்டு வெளியேற பணம் செலுத்துகிறது.

ஸ்வீடன் குடிவரவு அமைச்சர் மரியா மல்மர் ஸ்டான்கார்ட் (Maria Malmer Stenergard) இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளதை தொடர்ந்து தனது சொந்த குடிமக்களை நாட்டை விட்டு வெளியேற்ற ஸ்வீடன் முன்வந்துள்ளது.

அதாவது, ஸ்வீடன் கலாச்சாரத்தை விரும்பாதவர்கள் அல்லது இங்கு ஒன்றிணைந்து இருக்க முடியாதவர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்வீடன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பணமும் செலுத்துகிறது என ஐரோப்பிய வலைத்தளமொன்றும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, இந்த விதி வெளிநாட்டிலிருந்து வந்து ஸ்வீடனில் குடியேறும் குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் புதிய ஏற்பாட்டின் கீழ், இந்த விதி நாட்டில் பிறந்த குடிமக்களுக்கும் பொருந்தும்.

இந்த புதிய விதிகளின்படி, ஸ்வீடன் நாட்டை விட்டு வெளியேறும் ஒருவருக்கு 10,000 Swedish crowns ( இலங்கை பணமதிப்பில் ரூ .285,500)பணமாக கொடுக்கப்படுகின்றது.

குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறினால் அதில் பாதி (5000 Swedish crowns) கிடைக்கும். இது தவிர, அவர்களது பயண செலவுக்கும் பணம் தரப்படும். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு இந்த பணத்தை ஒரே நேரத்தில் பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் குறித்த அனுர
ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் குறித்த அனுர

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 05 இல் நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஸ்வீடன் – ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (Easter attack) தொடர்பான விடயங்களுக்கு தீர்வு காணும் வரையில் இலங்கை தொடர்ந்து நிலையற்றதாகவே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக எதிரணி அரசியல் தரப்பினர் ஒன்றிணையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் ஜனாதிபதி ரணில் உள்ளிட்ட அனைத்து எதிர் அணியினரும் ஒரே மேடையில் இணையவுள்ளனர்.

அவர்கள் ஏற்கனவே ஒன்றிணைவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர் என்றும் திஸாநாயக்க கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ரணிலுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கும் இடையிலான தனிப்பட்ட முரண்பாடுகள் இதில் ஒரு தடையாக இருக்கும்.

தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை தடுக்கவும், அந்தக் கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும் அவர்கள் ஒன்றுபடுவார்கள் என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த திஸாநாயக்க, இந்த தாக்குதல்களை முன்னெடுத்தவர்களும், தாக்குதல்களை தடுக்க வேண்டியவர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டார்களா என்பது கேள்விக்குறியே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இருந்தால், அது ஒரு சிக்கலான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். தனியார் ஹோட்டல் ஒன்றில் குண்டு வெடிக்காததால் ஜெமீல் தெஹிவளைக்கு சென்றார்.

இதனையடுத்து, அவர் இரண்டாவது தடவையாக வெடிகுண்டை வெடிக்கச்செய்யும் முன்னர் உளவுத்துறை அதிகாரிகள் சரியான நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்றது எவ்வாறு? இது எப்படி சாத்தியம்? என்று அனுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார்.

மாத்தளை பகுதியில் பொடி சஹ்ரான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் நடத்திய தாக்குதல் என்று ஏற்றுக்கொள்ளுமாறு ‘பொடி சஹ்ரான்’ வற்புறுத்தப்பட்டுள்ளார்.

இதை செய்தது யார் என்றும் அனுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், சாரா (ஜாஸ்மின்) இறந்துவிட்டாரா அல்லது அவரை காணவில்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரங்கள் தீர்க்கப்படும் வரை நாடு ஸ்திரமற்றதாகவே தொடரும் என்று அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிகரித்த அச்சுறுத்தல்… பாதுகாப்பை பலப்படுத்தும் பிரபல ஐரோப்பிய நாடு
அதிகரித்த அச்சுறுத்தல்… பாதுகாப்பை பலப்படுத்தும் பிரபல ஐரோப்பிய நாடு

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட குரான் எரிப்பு மற்றும் காஸாவில் நடந்துவரும் போர் காரணமாக டென்மார்க்கில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

டென்மார்க் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், ஒட்டுமொத்த அச்சுறுத்தல் நிலை 5 இல் 4 என்றும், ஆபத்து அதிகரித்துள்ளதாகவே கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

டென்மார்க் உட்பட பல நாடுகளுக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளின் போர் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் அதன் தாக்கம் டென்மார்க்கில் தென்பட வாய்ப்பிருப்பதாகவும் உளவுத்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இரு நாடுகளான டென்மார்க்கிலும் ஸ்வீடனிலும் கடந்த ஆண்டு குரானின் பல பிரதிகளை இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் மதத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவும் அனுமதிக்கப்பட்டனர். ஸ்வீடன் பயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி, இஸ்லாமியர்களின் புனித நூலை பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தீயிட்டு கொளுத்திய நடவடிக்கைக்கு பின்னர், பயங்கரவாத தாக்குதல் ஒன்றை முறியடித்துள்ளதாகவும் ஸ்வீடன் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, பொது இடங்களில் குரானை எரிப்பதை சட்டவிரோதமாக்கும் சட்டத்தை டென்மார்க் பாராளுமன்றம் டிசம்பர் மாதம் நிறைவேற்றியது. இது இஸ்லாமிய நாடுகளை அமைதிப்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்பட்டது.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிதியுதவி! கனடா, ஸ்வீடன் எடுத்துள்ள முக்கிய முடிவு
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிதியுதவி! கனடா, ஸ்வீடன் எடுத்துள்ள முக்கிய முடிவு

ஸ்வீடன் மற்றும் கனடா பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவன நிதியுதவியை மீண்டும் தொடங்கியுள்ளன.

ஸ்வீடன்(Sweden) மற்றும் கனடா(Canada) ஆகிய நாடுகள், பாலஸ்தீன அகதிகளுக்கு(Palestinian refugees) ஆதரவளிக்கும் ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலைகள் நிறுவனத்திற்கு (UNRWA) மீண்டும் நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளன.

2024 ஜனவரி இறுதியில் இஸ்ரேல்(israel), ஹமாஸ்(Hamas) தாக்குதலில் UNRWA ஊழியர்கள் ஈடுபட்டதாகக் கூறிய பின்னர், 14 நாடுகளுடன் சேர்ந்து கனடா மற்றும் ஸ்வீடன் ஆகிய இந்த இரு நாடுகளும் நிதியுதவியை நிறுத்தி வைத்தன.

ஐக்கிய நாடுகள் தற்போது இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது, மேலும் பிரான்ஸ் சுயாதீன விசாரணையை நடத்தி வருகிறது.

இந்நிலையில் செலவினங்கள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பை அதிகரிப்பதற்கான உத்தரவாதங்களை UNRWA வழங்கிய பின்னர், ஸ்வீடன் இன்று 200 மில்லியன் kronor (அதாவது 19 மில்லியன் டாலர்கள்) ஆரம்ப நிதியுதவியை அறிவித்துள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில் ஐரோப்பிய கமிஷன் €50 மில்லியன் (54.7 மில்லியன் டாலர்) நிதியை வெளியிடுவதற்கான முடிவைத் தொடர்ந்து ஸ்வீடன் நிதியுதவியை மீண்டும் தொடங்கியது.

இந்த முடிவுகளை தொடர்ந்து, காசாவில் உள்ள அவசர மனிதாநேய தேவைகளை காரணமாகக் காட்டி கனடாவும் நிதியுதவியை மீண்டும் தொடங்கியுள்ளது.

குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடரும் நிலையில், ஸ்வீடன் மற்றும் கனடாவின் முடிவுகள் மாற்றத்தைக் குறிக்கின்றன, மேலும் பாலஸ்தீன அகதிகளுக்கு ஆதரவளிப்பதில் UNRWA வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்கின்றன.

பாலஸ்தீன அகதிகளுக்கு சுகாதாரம், கல்வி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் முதன்மை நிறுவனம் UNRWA ஆகும்.

காசாவில் மட்டும் சுமார் 13,000 பேரை இந்த நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. நிதியுதவி நிறுத்தப்பட்ட பிறகு, நிறுவனம் உதவி வழங்குவதில் சிக்கல் எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

துருக்கியை சென்றடையவுள்ள அமெரிக்க போர் விமானங்கள்
துருக்கியை சென்றடையவுள்ள அமெரிக்க போர் விமானங்கள்

துருக்கிக்கு 23 டொலர் பில்லியன் மதிப்பிற்கு எஃப்-16 ரக இராணுவ போர் விமானங்களை தர முன்வந்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இதில் 40 புதிய எஃப்-16 ரக போர் விமானங்களும், தற்போது துருக்கியிடம் உள்ள 79 எஃப்-16 விமானங்களை மேம்படுத்துவதற்கான அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்கா தலைமையில் 31 உலக நாடுகள் ஒருமித்து உருவாக்கிய அமைப்பு நேட்டோ (NATO) எனும் வட அட்லான்டிக் கூட்டமைப்பு.

இக்கூட்டணியில் உள்ள ஒரு நாட்டின் மீது வேறொரு நாடு தாக்குதல் நடத்தினால், அது 31 நாடுகளையும் தாக்குவதற்கு சமமாக கருதப்பட்டு பதிலடி கொடுக்கப்படும்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர், இரண்டிலும் சுவீடன் பங்கேற்கவில்லை.

பெரும்பாலான உலக நாடுகளின் போர்களிலும் சுவீடன் பங்கேற்காமல் நடுநிலை வகித்து வந்தது. இந்நிலையில், 2022ல் தனது அண்டை நாடான உக்ரைனை ரஷ்யா “சிறப்பு இராணுவ நடவடிக்கை” எனும் பெயரில் ஆக்கிரமித்தது.

இதைத் தொடர்ந்து நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பினராக சேர சுவீடன் முடிவெடுத்தது.

2022ல், பின்லாந்து (Finland) மற்றும் சுவீடன் ஆகியவை நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில், பின்லாந்தின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது.

எனினும், துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) மற்றும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பான் (Viktor Orban) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடனின் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சுவீடன் நேட்டோவில் அங்கத்தினராவதை துருக்கியும் ஆதரித்தது.

இதைத் தொடர்ந்து துருக்கிக்கு 23 டொலர் பில்லியன் மதிப்பிற்கு எஃப்-16 ரக இராணுவ போர் விமானங்களை தர முன்வந்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இதில் 40 புதிய எஃப்-16 ரக போர் விமானங்களும், தற்போது துருக்கியிடம் உள்ள 79 எஃப்-16 விமானங்களை மேம்படுத்துவதற்கான அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், விமானங்களை வழங்குவதை விரைவாக செய்து முடிக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்துள்ளேன்! ஜஸ்டின் ட்ரூடோ
அந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்துள்ளேன்! ஜஸ்டின் ட்ரூடோ

பெல்ஜியத்தில் இருவர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடந்த சுவீடன் – பெல்ஜியம் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குழுமியிருந்தனர்.

சில ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

இதில் இரண்டு ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு இதனை நிகழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

‘பெல்ஜியத்தில் இருந்து வந்த செய்தியால் நான் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்தேன், மேலும் யாருடைய அன்புக்குரியவர்கள் அர்த்தமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கனேடியர்கள் நம் பெல்ஜியம் மற்றும் சுவீடிஷ் நண்பர்களுக்காக உடன் நிற்கிறோம் – மேலும் உலகெங்கிலும் உள்ள மக்களுடனும் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக நிற்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

சுவீடனில் படிப்பதற்காக காத்திருக்கும் இலங்கை மாணவர்களின் நிலை
சுவீடனில் படிப்பதற்காக காத்திருக்கும் இலங்கை மாணவர்களின் நிலை

சுவீடனில் உயர்கல்வி படிப்பதற்காக சுமார் 510 இலங்கை மாணவர்கள் அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தாலும், நாட்டிற்குள் நுழைவதற்கு இன்னும் ஒப்புதல் பெற முடியாமல் போயுள்ளது.

இதனால் மாணவர்கள் மனவிரக்தியடைந்து நம்பிக்கையற்றவர்களாகவும் மாறியுள்ளனர் என சுவீடன் உயர்கல்வி மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த மாணவர்களில் 30 முதல் 75 இலட்சம் வரை பணம் செலுத்தியவர்கள் உள்ளதாக நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் அரவிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

“சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதற்கு சுமார் 980 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 407 பேர் வீசா பெற்றுள்ளனர். ஆனால் எஞ்சியவர்களுக்கு வீசா வழங்கப்படுமா என்பதை அந்த நாடு அறிவிக்கவில்லை.

நாட்டில் சுவீடன் தூதரகம் இல்லாததால், இந்தியாவில் உள்ள டெல்லி தூதரகத்தில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், பல மாணவர்கள் டெல்லி தூதரகத்திற்குச் சென்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை.

சுவீடன் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்த பல பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டனர்.

சில பல்கலைக்கழகங்கள் அவர்களின் கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு காலத்தை நீட்டித்தது. ஆனால் சுவீடனில் குடியேற்ற நிறுவனம் ஒப்புதல் அளிக்காததால் உயர்கல்வி அனுமதிகளை இழந்துவிட்டனர்.

அத்துடன் சில மாணவர்கள் செலுத்திய பணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய மர நகரம்!!
உலகின் மிகப்பெரிய மர நகரத்தை உருவாக்க ஸ்வீடன் திட்டமிட்டுள்ளது.

ஸ்டாக்ஹோம் வூட் சிட்டி என அழைக்கப்படும் இந்த திட்டத்தை கட்டியெழுப்பவுள்ள Atrium Ljungberg நிறுவனம், உலகில் இதுவரை வேறு எந்த கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படாத அளவிற்கு அதிக மரங்களைப் பயன்படுத்த உள்ளதால், இதனை ‘world’s largest wooden city’ என பெயரிட்டது.

நவீனகட்டுமான திட்டங்களைப் போலவே, மர நகர வீடுகள் அடித்தளத்தில் சில கான்கிரீட் மற்றும் எஃகு பயன்படுத்தப்படும், ஆனால் அதன் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.

மரத்தாலான கட்டிடங்கள் இலகுவாக இருப்பதால் அவற்றின் அடித்தளமும் சிறியதாக இருக்கும் என்கிறார் நிறுவனத்தின் தலைவர் அன்னிகா அனஸ்.

மர வீடுகள் அவற்றின் கட்டுமானத்தில் மலிவானதாகவும் சத்தம் குறைவாகவும் இருக்கும். ஆனால், மர கட்டிடங்களின் மிகப்பெரிய கவலை தீ. இதற்காக, வூட் சிட்டியின் கட்டிடங்களில் பல தீ பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்படும்.நகரத்தில் ஸ்பிரிங்க்லர் மற்றும் ஃப்ளேம் ரெசிஸ்டண்ட் லேயர் இருக்கும்.

இந்த திட்டம் கான்கிரீட் மற்றும் எஃகு கட்டுமானத்துடன் ஒப்பிடும்போது கார்பன் தடயத்தை 40% குறைக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

2.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 2,000 வீடுகள், 7,000 அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் கடைகள் இருக்கும்.

இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.43,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், ஸ்வீடனில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனமான ஏட்ரியம் ஜங்பெர்க் தலைமையில் 2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2027-ல் நிறைவடையும் என கூறப்படுகிறது.