Channel 4 Easter Attack – tamilnaadi.com

பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட காணொளி தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிள்ளையான்
பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட காணொளி தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் தொடர்பாக, ‘செனல் 4’ ஒளிபரப்பிய ஆவணப்படத்தின் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாளைய தினம் (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய (UK) தொலைக்காட்சியான செனல் 4 உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் தொடர்பாக ஒளிபரப்பிய ஆவணப்படத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதன்போது, பிள்ளையானின் பேச்சாளரான, அஸாத் மௌலானாவின் தகவல்கள் தொடர்பில், பொது பாதுகாப்பு அமைச்சுக்கு, அமைப்பு ஒன்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் பலரும் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றியும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரானின் சர்ச்சைக்குரிய சத்தியப்பிரமாணம் : பிள்ளையான் பகிரங்கப்படுத்திய தகவல்கள்
சஹ்ரானின் சர்ச்சைக்குரிய சத்தியப்பிரமாணம் : பிள்ளையான் பகிரங்கப்படுத்திய தகவல்கள்

சர்வதேச விசாரணைகளில் கூட எனது பெயர் கூறப்படவில்லை. நான் சிறையில் இருந்ததன் அடிப்படையில் எனக்கு தெரிந்த தகவல்களை விசாரணை ஆணைக்குழுக்களுக்கு தெரிவித்தேன். நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது என்று இாஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்)(Sivanesathurai Santhirakanthan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இது தேர்தல் ஆண்டு என்ற அடிப்படையில் எதிர்கட்சியினரும் வேறு சிலரும் ரணித்த அந்த ஜீவன்களை மையப்படுத்தி இன்னமும் விவாதப்பொருளாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் அரசியலுக்காக என் மீதும் கை நீட்டுவதனை இங்கு அவதானித்தேன். அவர்களைப்பற்றி என்னால் கவலை மட்டும்தான் அடைய முடியும்.

எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத் தயராகவே இருக்கின்றேன். 2012 ஆம் ஆண்டிலிருந்தே இந்த மதப் பயங்கரவாத விடயம் மெல்ல மெல்ல வெளியே வரத்தொடங்கியது அதற்கு பௌத்த பேரினவாத சில சாதுக்களும் கடும் போக்காக பேசினார்கள்.

அதையொட்டி முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்களில் ஆங்காங்கே சில விடயங்கள் நடக்கத்தொடங்கின. ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதம் உலகத்தில் உச்சம் தொட்டிருந்த நிலையில்தான் இங்கும் ஆட்சி மாற்றங்கள் நடந்தன. அப்போது ஆட்சியை பொறுப்பெடுத்தவர்கள் இதனை சரியாக கண்டு கொள்ளவில்லை.

இங்கு சனல் 4 சம்பந்தமாக பொதுவாக பேசுவார்கள். இந்த நிறுவனம் இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் அறியப்பட்ட நிறுவனம். இந்தக்குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 8 பேரை வைத்து சத்தியப்பிரமாணம் செய்யும் சஹ்ரான் ” நான் இஸ்லாத்துக்காக மரணிக்கின்றேன், அல்லாஹ்வின் கொள்கையை பின்பற்றி மரணிக்கின்றேன், எனது இரத்தம், சதை எல்லாவற்றையும் நான் அதற்காக அர்ப்பணிக்கின்றேன், இது போராட்டத்துக்கான ஆரம்பம், எமது மதத்திற்கு எதிரான எல்லோரும் காபிர்கள், மாற்று மதங்களை சேர்ந்தவர்கள் கொல்லப்பட வேண்டும், அவுஸ்திரேலியாவில் தங்களைக்கொன்று விட்டு இலங்கை வரும் சுற்றுலா பயணிகளை எல்லாம் கொல்லுங்கள்,கண்ட இடத்தில் கொள்வதுதான் எனக்ளுக்கு அல்லாஹ் இட்ட கட்டளை ”என அழகாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

இவையெல்லாம் கடந்து சிறிய சிறிய துண்டு விடயங்களை பிடித்துக்கொண்டு இங்கு பேசுகின்றார்கள். சனல் 4 வில் காட்டுகின்றபோது அது ஒரு பிசுபிசுப்பான நாடகம். அந்த சனல் 4 தயாரிப்பாளரிடம் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய இதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனக் கேட்டார். அதற்கு அவர் எதுவும் இல்லை என்றார்.

ஆகவே இதில் எனது பெயரையும் இழுக்கின்றார்கள். சர்வதேச விசாரணைகளில் கூட எனது பெயர் கூறப்படவில்லை. நான் சிறையில் இருந்ததன் அடிப்படையில் எனக்கு தெரிந்த தகவல்களை விசாரணை ஆணைக்குழுக்களுக்கு தெரிவித்தேன்.

நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. இங்கு உள்ள ஒரு பிஞ்சு பிள்ளை மக்களைக் குழப்புகிறது. எனவே மக்களை குழப்ப வேண்டாம் என சாணக்கியன் போன்ற சிறு பிள்ளைகளுக்கு கூற விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4 குறித்து நாடாளுமன்றத்தில் பிரேரணை
சனல் 4 குறித்து நாடாளுமன்றத்தில் பிரேரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது.

குறித்த தெரிவுக்குழு நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி குறித்த பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காணொளியில் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்காக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பிள்ளையானின் ஊடக செயலாளரான ஹன்சீர் அஷாத் மௌலானா தெரிவித்திருந்தார்.

இதற்காக தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலேவுக்கும் தாக்குதல்தாரிகளுக்கும் இடையே தாம் சந்திப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தமக்கு தாக்குதல்தாரிகளை அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சு, தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நீதித்துறைக்கே மிகப்பெரும் கரும்புள்ளி – சாணக்கியன்
நீதித்துறைக்கே மிகப்பெரும் கரும்புள்ளி – சாணக்கியன்

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு நீதவான் நாட்டைவிட்டுச் சென்றிருக்கின்றார் என்றால் அது இலங்கையின் நீதித்துறைக்கே மிகப்பெரிய கரும்புள்ளியாக பார்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றமை தொடர்பில் கட்சி என்ற ரீதியில் நாங்கள் எந்தவொரு தீர்மானம் தொடர்பிலும் ஆராயவில்லை.

ஆனால் பொதுவாக இந்த விடயம் எங்களுடைய நீதித்துறைக்கு மிகப்பெரிய ஒரு கரும்புள்ளி என்று சொல்லலாம்.

குறிப்பாக, தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு இல்லை என தெரிவித்தும் இந்த நாட்டினுடைய இளைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை கேள்விப்பட்டிருக்கின்றோம்.

ஆனால் ஒரு நீதிபதி நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றார் என்றால் இதுதான் முதன்முறையாக கேள்விப்பட்டிருக்கின்றோம்.

உண்மையில் இந்த விவகாரத்தில் சில சில வழக்குகளுக்கு அழுத்தங்கள் வந்ததாக எல்லாம் ஊடகங்களில் பார்க்கக் கிடைத்தது. சனல் 4இல் வந்த விடயங்களிலும் இவ்வாறு நீதித்துறைக்கு எதிராக சில சில அழுத்தங்கள் தொடர்பில் குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றது.

இதன் காரணமாகத்தான் நாங்கள் கூறுகின்றோம், இவ்வாறான விடயங்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை அவசியம் வேண்டும் என்று என குறிப்பிட்டார்.

கொழும்பில் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் திட்டம்!
கொழும்பில் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் திட்டம்!

கொழும்பில் உள்ள ஏழு முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று (05.10.2023) கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பில் நாடாளுமன்றம், துறைமுகநகரம், கங்காராமய உள்ளிட்ட ஏழு இடங்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலை நடத்தும் திட்டம் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பசன் அமரசிங்கவிடம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தீவிரவாத செயல்களுக்காக தற்போது சிறையில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

பயங்கரவாதிகளின் திட்டம் தொடர்பான உண்மைகளை அறிந்த பல்லேகல சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர், அது தொடர்பான குறிப்புகள் அடங்கிய கடிதத்தை தன்னேகும்புர பொலிஸ் நிலையத்திற்கு எறிந்த போது இந்த திட்டம் தெரியவந்துள்ளது.

சிறையிலுள்ள இந்த பயங்கரவாதிகள் கொழும்பில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிடும் உரையாடலைக் கேட்ட இந்தக் கைதி, பின்னர் இந்தக் கைதியையும் தாக்கியுள்ளனர்.

பல்லேகலையில் இருந்து மஹரவிற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட போது தான் அறிந்த அனைத்து தகவல்களையும் கொண்ட கடிதத்தை அவர் தன்னேகும்புர பொலிஸ் நிலையத்திற்கு எழுதி எறிந்துள்ளார்.

இந்தக் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குறித்த கைதியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றில் அனுமதி கோரினர். குறித்த விடயத்தை பரிசீலித்த நீதவான், குறித்த அதிகார எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தினால் கோரிக்கை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

ரவிராஜை கொலை செய்தவர் யார்..! அசாத் மௌலானாவின் ஆதாரங்கள்
ரவிராஜை கொலை செய்தவர் யார்..! அசாத் மௌலானாவின் ஆதாரங்கள்

ரவிராஜ் படுகொலை தொடர்பில் அசாத் மௌலானா கூறிய தகவல்கள் பல என்னை வந்து சேர்ந்திருக்கின்றன. அவை அதிகாரபூர்வமாக விரைவில் வெளிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ரவிராஜை படுகொலை செய்தவர் யார், படுகொலை செய்வதற்கு உத்தரவிட்டவர் யார், முதல் உத்தரவு யாரிடம் இருந்து வந்தது, இறுதி உத்தரவு யாரிடம் இருந்து வந்தது என்றெல்லாம் அசாத் மௌலான பல தகவல்களை வெளியிட்டிருக்கின்றார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

திரிபோலி என்று சொல்லப்படும் அந்த கொலைக் குழு முதலில் கொலை செய்ய முயற்சி செய்தது என்னை. என் பெயரும் சொல்லப்பட்டது. ஆனால் அது சாத்தியமாகவில்லை என்றும் சொல்லப்பட்டது.

எல்லா பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், எல்லா பொலிஸாரும், இராணுவத்தினரும் மோசமானவர்கள் அல்லர். ரவிராஜ் படுகொலை செய்யப்படும் போது அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் கொல்லப்பட்டாரே.

இந்த அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக, அரசியல் தேவைக்காக சில குழுக்களை வைத்திருக்கின்றார்கள். இது சாதாரண பொலிஸாருக்கு தெரியாது.

எனக்கு இருந்த ஆபத்து தொடர்பில் நல்லெண்ணம் கொண்ட பொலிஸார் எனக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர்.

நானும், ரவிராஜூம் கலந்து கொள்ளவிருந்த களுத்துறை கூட்டத்தில், அந்த மேடைக்குப் பின்னால் இருந்து கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

ஆசாத் மௌலானாவின் திடுக்கிட வைக்கும் உண்மைகள்!
ஆசாத் மௌலானாவின் திடுக்கிட வைக்கும் உண்மைகள்!

ஆசாத் மௌலானாவை எனக்கு நன்றாக தெரியும். பிள்ளையானுடன் மிக நெருங்கி செயற்பட்டவர். சனல் 4 காணொளியில் அவர் கூறியிருப்பதை நிராகரித்து விட முடியாது. எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஆசாத் மௌலானா கூறியவற்றில் பெரும்பாலும் உண்மைத் தகவல்களே உள்ளன என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சபையில் நான் சுகாதார அமைச்சராக இருந்த போது முதலமைச்சராக இருந்த சிவநேசத்துரை சந்திரகாந்தனின் செயலாளராக ஆசாத் மௌலானா செயற்பட்டார். நன்றாகப் பேசக்கூடிய ஒருவர். சமய நிகழ்வுகளில் என்னோடுதான் இணைந்து கொள்வார். சமய கொள்கைகளை கடைப்பிடிக்கின்ற ஒருவர்.

ஆனால் அவர் பொய் பேசுவாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னோடு அவர் அப்படி பேசியதும் கிடையாது. அப்போது முதலமைச்சராக இருந்த பிள்ளையான் எம்.பியினுடன் மிக நெருக்கமாக இருந்தவர். மிக உதவியாக இருந்தார். என்ன பிரச்சினையோ எனக்கு தெரியாது.

உண்மையில் பிள்ளையான் சிறையினுள்ளே இருந்தபோது அவரை விடுதலை செய்து வெளியில் கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்த ஒரு நபர் ஆசாத் மௌலானா.

இப்போது அவர் சனல் 4இல் வெளியிட்டுள்ள விடயங்கள், அவருடைய கருத்துக்களை நான் கேட்கின்ற போது அதில் நிராகரிக்க கூடிய வகையில் அந்த கருத்துக்கள் அமையவில்லை.

அவருடைய கருத்துக்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, ஆசாத் மௌலானா சொல்லும் கருத்துக்களையும், நடந்த விடயங்களையும், நான் அறிந்த, கிடைத்த சில விடயங்களையும் வைத்து பார்க்கும் போது ஆசாத் மௌலானாவின் தகவல்களை முழுமையாக நிராகரிக்க முடியாது. சில சில விடயங்கள் உட்சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவை நிராகரிக்கக் கூடியவாறு இல்லை.

ஆசாத் சொன்ன விடயங்களில் நிறைய உண்மைகள் இருக்கின்றது. எனவே அவை உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையான் தொடர்புபட்டாரா என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால் ஆசாத் மௌலானாவின் கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது பிள்ளையானுடன் இணைந்து செய்ததாகத்தான் அவர் கூறியிருக்கின்றார். அவ்வாறிருப்பின் விசாரணைகள் செய்துதான் அவை கண்டறியப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4 பொய்! மீண்டும் சர்ச்சை நிலை
சனல் 4 பொய்! மீண்டும் சர்ச்சை நிலை

சனல் 4 நிறுவனம் வெளியிட்ட அனைத்தும் பொய்யா என நாம் கேட்க விரும்புகின்றோம் என்று பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜனர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமிற்கும் இடையில் தொடர்பு இருந்ததாகவும், அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் பெரிதாக கூச்சலிட்டனர்.

இறுதியில் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கும் மொட்டு கட்சியினர் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கும் ராஜபக்சவினர் செய்த செயலே இது என நிரூபிப்பதற்கு பலர் முயற்சி செய்தனர்.

எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து எம்மீது சேறு பூசுவதற்கு பாரியளவில் முயற்சி செய்தனர்.

சலேவுடனோ, அல்லது இது தொடர்பிலோ எவ்வித தொடர்பும் இல்லையென சனல் 4 நிறுவனத்தின் பணிப்பாளரும், நிறைவேற்று பணிப்பாளரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே இதுவும் பொய்யா என நாம் வினவுகின்றோம்.

அனைத்தையும் அங்கும் இங்கும் தாக்கி ராஜபக்சர்களை தாக்குவதற்கே முயற்சிக்கின்றனர். ராஜபக்சர்களின் மூலமே நாம் இன்று சுவாசிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இன்டர்போலிடம் பிள்ளையான் சரணடைவதே முக்கியம்!
இன்டர்போலிடம் பிள்ளையான் சரணடைவதே முக்கியம்!

இன்டர்போலிடம் பிள்ளையான் சரணடைவதே முக்கியம் என பிரித்தானியத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவி தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றது, ரவிராஜை கொன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் மீது உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் குறிப்பிட்ட காலம் வரை தங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று சொன்னவர்கள் தற்போது குத்துக்கரணம் அடித்துள்ளார்கள் என்றும் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

சஹ்ரானை தொடர்பு கொண்ட இந்தியப் புலனாய்வு பிரிவு
சஹ்ரானை தொடர்பு கொண்ட இந்தியப் புலனாய்வு பிரிவு

இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் நாட்டில் 11 சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் சஹ்ரானுடன் தொடர்புகொண்டு ஐ.எஸ் தொடர்பாக பல தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சனல் 4 செய்திச்சேவை வெளியிட்ட ஆவணப்பட தொகுப்பில் எந்த விசாரணையும் இல்லாமல், ஆராய்ந்து பார்க்காமல் ஈஸ்டர் தாக்குதல் தொடரபான குற்றச்சாட்டை கோட்டாபய ராஜபக்ச மீது சுமத்த மோசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலுக்கும் ராஜபக்சவினருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த தாக்குதல் தொடர்பாக பல விசாரணைகள் இடம்பெற்றிருக்கின்றன. சர்வதேச விசாரணைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அதன் பிரகாரம் இந்த தாக்குதல் தொடர்பில் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாமிய ராஜ்ஜியம் அமைக்கும் சிந்தனைகொண்ட குழுவினாலே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

இதில் சஹ்ரான் ஹசீமின் தேசிய தெளஹீத் ஜமாத் இணைந்துகொண்டிருந்தது. சஹ்ரானுக்கு வழிகாட்டியது தற்போது சிறையில் இருக்கும் நவ்பர் மெளலவி என்ற நபராகும்.

இந்நிலையிலேயே 2014இல் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் உலக முஸ்லிம் ராஜ்ஜியம் என்ற சிந்தனையை அறிமுகப்படுத்தினார்.

எமது நாட்டில் இந்த தாக்குதல் 2019இல் இடம்பெறுவதற்கு முன்னர் 11 சம்பவங்கள் இடம்பெற்றன. நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே இடம்பெற்றிருக்கின்றன.

இந்த சம்பவங்கள் இடமப்பெற்றுக்கொண்டிருக்கையில் இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் சஹ்ரானுடன் தொடர்புகொண்டு ஐ.எஸ். தொடர்பாக பல தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளார். இந்த தகவல்கள் மூலமே தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் இந்தியா எமது பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் வழங்கி இருந்தது.

ஆனால் எமது பாதுகாப்பு சபையில் இருந்த குழப்ப நிலை காரணமாக இந்த இரகசிய தகவலை சரியான முறையில் ஆராயாமல் இருந்ததன் பலனாகவே இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போயிருக்கிறது. அதனால் ஈஸ்டர் தாக்குதலுக்கும் கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுன கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்திய புலனாய்வு பிரிவு தகவல் வழக்கியும் எமக்கு அதனை தடுக்க முடியாமல் போயிருக்கிறது. அத்துடன் அபூஹிந் என்பது இந்திய புலனாய்வு பிரிவு சஹ்ரான் மற்றும் சிலருடன் கலந்துரையாட பயன்படுத்திய சொல். அதேபோன்றே சொனிக் சொனிக் வார்தையும் அப்படித்தான்.

எனவே இந்த தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த அனைவரும் பொறுப்பு கூறவேண்டும். நானும் அந்த அரசாங்கத்தில் இருந்தவன். என்றாலும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டார்.