யாழ்ப்பாணம் நெடுந்தீவில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 119.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி...
அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கால எல்லை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று இந்த தகவலை வெளியிட்டார். இதன்படி தொடர்ச்சியாக 10 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக (2 தடவைகள்) செயற்பட்டிருந்தால் மட்டுமே அந்த உறுப்பினர்...
வடக்கே ஏறத்தாழ 300 கிலோ மீற்றர் தூரத்தில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மாலையளவில் வட தமிழ்நாட்டு கரையை...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று மதியம் 2 மணிக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சபையில் முன்வைக்கப்பட்டது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. இதன்போது சபைக்கு வந்த...
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் சந்திக்கருகாமையில் ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். பளைநோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின்னால், துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் டிப்பர்...
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 300 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 194 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சிரற்ற...
டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் தற்போது இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக தேங்கி நிற்கும் மழைநீரால் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் வீட்டுச் சூழல் உட்பட நுளம்புகள்...
ஹொரணை, இங்கிரிய பகுதியில் பாணில் நத்தை ஒன்று இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பேக்கரி பொருட்களை வினியோகிக்கும் நடமாடும் வாகனத்தில் கொள்வனவு செய்த பாணில் நத்தை இருந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக வாகன விற்பனையாளருக்கும், பேக்கரி உரிமையாளருக்கும் பாணைக்...
வரவு- செலவுத் திட்டத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதுவும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் கருத்து...
பருத்தித்துறை பகுதியில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனித்து நின்ற சிறுமியிடம் (வயது...
நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் உருவாக்கப்பட்ட...
மிளகாய் உற்பத்தியில் ஈடுபட விருப்பமுள்ள வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க முடியுமென விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வடக்கு இளைஞர்கள் அக்கறை காட்டினார்கள் என்றால், உதவிகளை வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமிக்கவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சபைக்கு வந்த...
இலங்கை – இந்திய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் பிரதித் தலைவராக சம்பந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் மறுமலர்ச்சிக் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா...
சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 40 ஆயிரத்து 333 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 15 வீடுகள் முழுமையாகவும்,...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 வீதத்தால் அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலைமை தொடருமானால் நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை உருவாகும் எனவும், எனவே, மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்...
இலங்கையில் மிக இளவயதில் (வயது – 32) நீதிபதியாக தர்மலிங்கம் பிரதீபன் தெரிவாகியுள்ளார். நேற்றைய தினம் இலங்கையில் நீதிபதிகளாக தெரிவு செய்யப்பட்டிருப்போரில் இளம்வயதுடைய பிரதீபனும் ஒருவராவார். சாவகச்சேரி கல்வயல் கிராமத்தை சேர்ந்த இவர், சாவகச்சேரி டிறிபேக்...
முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த அலுவலகத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையிலேயே அலுவலக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்...