உலகம்

கனடாவில் முகநூலில் இடம்பெற்ற பண மோசடி : 6000 டொலர்களை இழந்த பெண்

Published

on

கனடாவில் முகநூலில் இடம்பெற்ற பண மோசடி : 6000 டொலர்களை இழந்த பெண்

கனடாவின்(Canada) ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் ஊடாக மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களின் போது 6000 டொலர்களை இழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எமென்டா மசோடா சூசா என்ற பெண் இவ்வாறு பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகநூல் சந்தையின் ஊடாக இந்த பெண் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ள நிலையில், 40 டொலருக்கு பொருள் ஒன்றை கொள்வனவு செய்வதாக வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பிய தகவலை அடிப்படையாகக் கொண்டு குறித்த பெண் தகவல்களை வழங்கியுள்ளார்.

இதன் போது குறித்த பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து 6000 டொலர்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தனது வங்கி அட்டை இலக்கம் மற்றும் கடவுச்சொல் என்பனவற்றை வழங்கியதன் பின்னர் வங்கி அட்டை ஹேக் செய்யப்பட்டு இவ்வாறு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மேலும், விபரங்களை திருடி இவ்வாறு பண மோசடிகள் இடம் பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version