உலகம்
அரிசி, கோதுமைக்கு அடுத்து… இன்னொரு ஏற்றுமதி தடை விதித்த இந்தியா
அரிசி, கோதுமைக்கு அடுத்து… இன்னொரு ஏற்றுமதி தடை விதித்த இந்தியா
எதிர்வரும் அக்டோபரில் இருந்து சர்க்கரை ஏற்றுமதியை இந்தியா தடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலைகள் சர்க்கரை ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு தடை செய்வது கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறை என்றே கூறப்படுகிறது.
போதிய மழை இல்லாததால் கரும்பு விளைச்சல் குறைந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே இந்திய அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மூன்று அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
ஏற்கனவே நியூயார்க் மற்றும் லண்டன் சந்தையில் சர்க்கரை பல மடங்கு விலைக்கு விற்கப்படும் நிலையில், இந்தியாவின் இந்த முடிவு உலகளாவிய உணவுச் சந்தைகளில் மேலும் பணவீக்கம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும் என்றே நம்பப்படுகிறது.
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி தடை விதித்தபோது பட்டியிலடப்பட்ட அதே காரணங்களையே சர்க்கரை தொடர்பிலும் கூறப்படுகிறது. அதாவது, உள்ளூர் சர்க்கரை தேவைகளை பூர்த்தி செய்வதும், உபரி கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதும் முதன்மையான கவனமாக உள்ளது என பதிலளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே சூழலில் வரவிருக்கும் பருவத்தில், ஏற்றுமதி ஒதுக்கீட்டிற்கு ஒதுக்க போதுமான சர்க்கரை இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளனர். செப்டம்பர் 30 வரை நடப்பு சீசனில் 6.1 மில்லியன் டன் சர்க்கரையை மட்டுமே ஏற்றுமதி செய்ய ஆலைகளுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.
கடந்த சீசனில் 11.1 மில்லியன் டன் அளவுக்கு ஆலைகள் ஏற்றுமதி செய்துள்ளனர். இதனிடையே, அதிக கரும்பு விளைச்சலை அளிக்கும் மகாராஷ்டிராவின் மேற்கு பகுதி, மற்றும் கர்நாடகாவின் தென் பகுதிகளில் இந்த ஆண்டு இதுவரை பருவ மழை சராசரியாக 50 சதவீதம் குறைவாக உள்ளது.
இதனால் உள்ளூர் சர்க்கரை விலை இந்த வாரம் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மட்டுமின்றி, இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 11.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
மேலும், 2023/24 பருவத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 3.3 சதவீதம் குறைந்து 31.7 மில்லியன் டன்னாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. இதனிடையே, கடந்த 2016ல், வெளிநாட்டு விற்பனையைக் கட்டுப்படுத்த இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இலங்கையில் அதிகரித்துள்ள ஏற்றுமதி! - tamilnaadi.com