இந்தியா

இந்திய விஞ்ஞானிகள் குறித்து சர்ச்சை கார்ட்டூன்! நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வலுக்கும் எதிர்ப்பு

Published

on

இந்திய விஞ்ஞானிகள் குறித்து சர்ச்சை கார்ட்டூன்! நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வலுக்கும் எதிர்ப்பு

இந்திய விஞ்ஞானிகள் மற்றும் சந்திராயன் தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் மீது நாடார் சங்க தலைவர் முத்துரமேசு காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் சர்ச்சையான கார்ட்டூன் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், நிலவிலிருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என பதிவிட்டிருந்தார்.

அந்த கார்ட்டூனில் ஒருவர், நீண்ட தூரத்தில் கைகளை உயர்த்தியபடி டீ ஆத்துவது போல இருந்தது. இதற்கு, பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தர்.

பின்பு, இதற்கு விளக்கம் கொடுத்த பிரகாஷ் ராஜ்,”இது ஒரு பழைய ஆம்ஸ்ட்ராங் காலத்து ஜோக், இது கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவைல்லையா? என கூறினார்.

இந்த சம்பவத்தையடுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் மீது தமிழ்நாடு நாடார் சங்க நிர்வாகிகள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பின்னர், நாடார் சங்க தலைவர் முத்துரமேசு செய்தியாளர்களை சந்தித்த போது,”பிரகாஷ் ராஜ் வெளியிட்ட புகைப்படம் இந்திய விஞ்ஞானிகளையும், இஸ்ரோ தலைவரையும், இந்திய மக்களையும் கிண்டல் செய்யும் விதமாக உள்ளது.இந்த புகைப்படமானது இஸ்ரோ தலைவர் டீ ஆத்துவது போல இருப்பதாகவும், இது கண்டிக்கத்தக்கது” என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர்,”இந்திய அரசால் வழங்கபட்ட பிரகாஷ் ராஜின் அனைத்து அடையாளங்களையும் இந்திய அரசு பறிக்க வேண்டும். அவர் இந்தியர் என்பதற்கு தகுதி அற்றவர்” எனக் கூறினார்.

Exit mobile version