உலகம்
குடியுரிமை தொடர்பில் ஜேர்மனியில் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி
குடியுரிமை தொடர்பில் ஜேர்மனியில் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி
ஜேர்மனி அரசு, இன்று, புதன்கிழமை, தனது புதிய குடியுரிமைச் சட்டத்தை முன்வைக்கிறது. சட்டத்தை உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் முன்மொழிந்ததுடன், முன்வைத்தும் உள்ளார்.
இந்த சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறுவதையும், இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதையும் எளிதாக்கும்.
ஜேர்மனியில் புதிய கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதலே, இந்த மாற்றம் குறித்து கூட்டணியில் பங்கேற்றுள்ள கட்சிகள் பேசிவந்தன.
புதிய குடியுரிமைத் திட்டங்களின் கீழ், மூன்று மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
1. ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கவேண்டுமானால், அவர்கள் எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை மாற்றி, ஐந்து ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தால் போதும் என முடிவு செய்யப்பட உள்ளது.
2. ஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகள், அவர்களுடைய பெற்றோரில் ஒருவராவது சட்டப்படி ஜேர்மனியில் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமாக வாழ்ந்திருக்கும் பட்சத்தில், அந்தக் குழந்தைகள் தானாகவே ஜேர்மன் குடிமக்களாக ஆகிவிடுவார்கள்.
3. ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமைகள் வைத்திருக்க அனுமதியளிக்கப்பட உள்ளது. மேலும், 67 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், ஜேர்மன் மொழித்தேர்வை எழுதுவதற்கு பதிலாக, அது அவர்களுக்கு வாய்மொழித்தேர்வாக மாற்றப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இறந்தவர்களின் குடும்பத்திற்குப் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 இலட்சம் இந்திய ரூபா வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் இந்திய ரூபாவும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்த விடயங்களுக்காக பணிநீக்கம் - tamilnaadi.com