உலகம்

பிரான்சுக்கு சிவப்பு எச்சரிக்கை: விவரம் செய்திக்குள்

Published

on

பிரான்சுக்கு சிவப்பு எச்சரிக்கை: விவரம் செய்திக்குள்

பிரான்சில் வரலாறு காணாத அளவில் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்ஷியஸை எட்டியுள்ள நிலையில், காட்டுத்தீ மற்றும் வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், அதாவது, நேற்றும் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் வெயில் உச்சத்தைத் தொடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக தென் பிரான்சில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸை தாண்டிவிட்டது.

பிரான்சின் 96 டிபார்ட்மெண்ட்களில் 50க்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் இரண்டாவது அதிகபட்ச வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். வரும் நாட்களில் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அதிகபட்சமாக சிவப்பு எச்சரிக்கையாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காட்டுத்தீ ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில வனப்பகுதிகளுக்குச் செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பிரான்சிலுள்ள ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள Chanousse என்னும் கிராமத்தின் அருகே காட்டில் தீப்பற்றியுள்ளது.

சுமார் 260 தீயணைப்புவீரர்கள் அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சுமார் 120 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மரங்களை தீ கபளீகரம் செய்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version