உலகம்

இளைஞரின் வெறிச்செயலுக்கு பலியான தாயார்

Published

on

இளைஞரின் வெறிச்செயலுக்கு பலியான தாயார்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தன்பால் ஈர்ப்பாளர்களின் அடையாளமான கொடி கடைக்குள் காணப்பட்டதை அடுத்து, அந்த கடை உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சமூக ஊடகத்தில் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு எதிராக பதிவிட்டு, அதன் பின்னர் அந்த கடை உரிமையாளரை கொலை செய்துள்ளதும் பொலிஸ் விசாரணையில் அம்பலமானது.

அத்துடன், கொலைக்கு பின்னர், தொடர்புடைய சமூக ஊடக பதிவு காரணமாகவே பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். தன்பாலின ஈர்ப்பாளர்கள் நம்மீது அதிகாரம் செலுத்த முயல்வதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள அந்த பதிவில்,

இந்த மனநலம் குன்றிய கொடுங்கோலர்களுக்கு அடிபணியுமாறு அரசு வற்புறுத்தும் இந்த அசிங்கத்தை ஏற்றுக் கொள்வதை நிறுத்துங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட 66 வயது லாரா ஆன் கார்லேடன் என்பவரது படுகொலையில் அதிரடி திருப்பமாக 27 வயது Travis Ikeguchi என்பவரே கொலைகாரன் என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

மேலும், கார்லேடன் மீதான தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே அவர் பொலிசாரால் கொல்லப்பட்டார் எனவும் தகவல் வெளியானது. 9 பிள்ளைகளுக்கு தாயாரான கார்லேடன் தாம் கொண்ட கொள்கை காரணமாக பலியாகியுள்ளார் என்றே அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Travis Ikeguchi துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் தன்பாலின ஈர்ப்பாளர்கள் கொடியை அகற்ற வலியுறுத்தி சத்தமிட்டுள்ளார். பின்னர் துப்பாக்கியால் கார்லேடனை சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிய நிலையில், சிறப்புப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5 மணியளவில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக ஷெரிப் அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடும் பெண் ஒருவரை மீட்டுள்ளனர். ஆனால் முதலுதவிக்கு முன்னர் அவர் மரணமடைந்ததாக அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version