உலகம்

கையில் பேனா வைத்து இருந்த நபரை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பொலிஸார்

Published

on

கையில் பேனா வைத்து இருந்த நபரை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பொலிஸார்

அமெரிக்காவில் கத்தியை கொண்டு தாக்க வருவதாக நினைத்து மார்க்கர் பேனாவை கையில் வைத்து இருந்த நபரை பொலிஸார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற துயர சம்பவம் ஒன்றின், கிராஃபிக் உடல் கேமரா காட்சிகளை டென்வர் காவல்துறை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

அதில், பிராண்டன் கோல் (Brandon Cole) என்ற 36 வயதுடைய நபர் கத்தியை கொண்டு தாக்க வருவதாக நினைத்து தற்காப்பிற்காக அவரை பொலிஸார் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது பதிவாகியுள்ளது.

ஆனால் பிராண்டன் கோல் தன்னுடைய கையில் மார்க்கர் பேனா தான் வைத்து இருந்தார் என்பதை பின்னர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் டென்வர் காவல்துறை இந்த துப்பாக்கி சூட்டை மிகப்பெரிய சோகம் என்று குறிப்பிட்டுள்ளது, அத்துடன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

CBS செய்திகள் படி, குடும்ப வன்முறை தொடர்பாக அண்டை வீட்டார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அப்போது பிராண்டன் கோலை நோக்கி துப்பாக்கியை நீட்டிய பொலிஸாரை பார்த்து வீல் நாற்காலியில் அமர்ந்து இருந்த கோலின் மனைவி, “தயவு செய்து தனது கணவனை துப்பாக்கியால் சுட்டு விடாதீர்கள் என்று கெஞ்சினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக பொலிஸார் அவரது கணவர் பிராண்டன் கோலை தற்காப்பு நோக்கில் சுட்டனர் என தெரியவந்துள்ளது.

1 Comment

  1. Pingback: சூர்யாவின் கங்குவா படத்தை பார்த்த பிரபலம்- முதல் விமர்சனம் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version