உலகம்
ஜேர்மனியின் குடியுரிமை சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
ஜேர்மனியின் குடியுரிமை சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
ஜேர்மன் குடியுரிமை தொடர்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இந்த மாதமே ஜேர்மன் நாடாளுமன்றில் நடத்தப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், ஜேர்மனியின் கோடை விடுமுறைக்குப் பிறகு பணிக்குத் திரும்பியுள்ள ஜேர்மன் நாடாளுமன்ற அமைச்சர்கள், ஜேர்மனியின் குடியுரிமைச் சட்டங்களை விரைவாக புதுப்பிக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்டீபன் தோமே, “குடியுரிமை சட்டமூலம் மீது, அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த வாரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இன்னும் தெளிவாகக் கூறினால், இம்மாதம், மாதம் 23ஆம் திகதி அல்லது 30 ஆம் திகதி குடியுரிமை சட்டமூலம் நிறைவேற்றப்படலாம்.” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம், சட்டமூலம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
You must be logged in to post a comment Login