உலகம்

உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! விஷம் காரணமா?

Published

on

உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! விஷம் காரணமா?

உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாமா என்பது குறித்து ஜேர்மன் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைக் கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த ரஷ்ய ஊடகவியலாளர் Elena Kostyuchenko.

Elena உக்ரைனிலுள்ள மரியூபோல் நகரிலிருந்து செய்தி சேகரித்துவந்த நிலையில், ரஷ்யர்கள் அவரைக் கொலை செய்யமுயற்சி செய்வதாக உக்ரைன் ராணுவ தரப்பிலிருந்து துப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்குத் தப்பிவந்தார் அவர்.

மீண்டும் செய்தி சேகரிப்பதற்காக உக்ரைன் செல்வதற்காக, விசாவுக்காக ஜேர்மனியின் Munich நகருக்குப் பயணித்த Elena, ரயிலில் மீண்டும் பெர்லினுக்குத் திரும்பும்போது, திடீரென அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங்கியுள்ளன.

கடும் தலைவலி, தளர்ச்சி, மூச்சுத்திணறல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது Elenaவுக்கு. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Elenaவுக்கு கல்லீரல் என்சைம்கள் திடீரென ஐந்து மடங்கு அதிகரித்திருந்தது தெரியவந்தது. அத்துடன், அவரது சிறுநீரில் இரத்தமும் வெளியேறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஜேர்மன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். இடையில் அந்த விசாரணை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது அந்த விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version