உலகம்

உக்ரைனில் ரஷ்யாவுக்கெதிராக போரிடச் சென்ற பிரித்தானியர் மாயம்

Published

on

உக்ரைனில் ரஷ்யாவுக்கெதிராக போரிடச் சென்ற பிரித்தானியர் மாயம்

முன்னாள் ராணுவ வீரரான பிரித்தானியர் ஒருவர், ரஷ்யாவுக்கெதிராக போரிடுவதற்காக உக்ரைன் சென்ற நிலையில், அவர் திடீரென மாயமாகியுள்ள விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியரான டேனியல் (Daniel Burke, 36), திடீரென மாயமாகியுள்ளதால், அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கவலையடைந்துள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரரான மான்செஸ்டரைச் சேர்ந்த டேனியல், கடந்த வாரம், வெள்ளிக்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 11ஆம் திகதி கடைசியாக Zaporizhzhia நகரில் உயிருடன் காணப்பட்ட நிலையில், அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை.

ஜனவரி மாதம் இதேபோல பிரித்தானியர்களான Andrew Bagshaw (47) மற்றும் Christopher Parry (28) என்னும் இருவர் உக்ரைன் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட முயன்றபோது மாயமானார்கள்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர்கள் உயிரிழந்துவிட்டதை அவர்களுடைய குடும்பத்தினர் உறுதி செய்தனர்.

ஆகவே, டேனியலும் கடத்தப்பட்டிருக்கலாம், அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது நண்பர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version