உலகம்

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் வெளியான புதிய தகவல்

Published

on

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் வெளியான புதிய தகவல்

பிரித்தானியாவில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை உட்பட மூவருக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஹார்சல் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி சாரா ஷெரீப் வழக்கில் அவரது தந்தைக்கும் தொடர்பிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படும் மூவரும், சிறுமி சாரா ஷெரீபுக்கு நன்கு அறிமுகமானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் அவர்கள் சென்றபோது வேறு யாரும் அந்த குடியிருப்பில் இருக்கவில்லை என்று சர்ரே பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், முறையான அடையாளம் காணு நடவடிக்கைகள் இன்னும் நடைபெறவில்லை எனவும்,

செவ்வாய்க்கிழமை பிற்பகல் உடற்கூறு ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். சிறுமி சாராவின் தாயார் ஓல்கா ஷெரீப் தெரிவிக்கையில், எனது வாழ்க்கை இனி முன்பு போல ஒருபோதும் இருக்காது. சாரா இப்போது என்னுடன் இருக்க வேண்டியவள் என கண்கலங்கியுள்ளார்.

நீதிமன்றமூடாக மகள் சாராவின் மொத்த உரிமையும் தமது முன்னாள் கணவர் உர்ஃபான் ஷெரீப் கைப்பற்றியதாக ஓல்கா தெரிவித்துள்ளார். போலந்தில் பிறந்தவரான ஓல்கா, தமது ஒரே மகளின் மரணத்திற்கு பின்னர் தூக்கத்தை தொலைத்தவராக அவதிப்பட்டு வருகிறார்.

உள்ளூர் டாக்சி சாரதியான உர்ஃபான் ஷெரீப்பை 2009ல் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ள ஓல்கா, 2017ல் விவாகரத்து பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறை கூட மகள் சாராவை சந்தித்ததில்லை என கூறும் ஓல்கா, தற்போது அவள் மரணமடைந்த தகவல் கேட்டு நொறுங்கிப்போனதாக தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version