உலகம்

இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் ஒலித்த ஜன கண மன!

Published

on

இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் ஒலித்த ஜன கண மன!

200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன’ இன்று பாடப்பட்டது.

‘ஜன கண மன’ எப்பொழுது கேட்டாலும் ஒவ்வொரு இந்தியரின் உள்ளமும் பொங்கும். இது நாட்டின் மீதான அன்பையும் பற்றையும் குறிக்கிறது. இது சாதாரணமாக வந்துவிடாவில்லை, தொழிலுக்காக இந்தியா வந்து இங்குள்ள செல்வங்களைப் பார்த்து பேராசைப்பட்டு, இந்தியர்களை அடிமையாக்கி 200 ஆண்டுகாலம் ஆண்ட வெள்ளையர்களை விரட்டியடித்து சுதந்திரம் பெற்றோம். அதனால் இந்தியர்களுக்கு சுதந்திர தினம் என்பது மிகப்பாரிய விடியம்.

இந்தியாவை எந்த நாடு ஆட்சி செய்ததோ, அதே நாட்டில் இந்தியர்களுக்கு உயர் பதவிகள் கிடைத்தன. மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவின் பிரதமரானார். இந்தியர்கள் எங்கு குடியேறினாலும், இந்திய வேர்கள் அவர்கள் மனதில் எப்போதும் இருக்கும்.

இந்தியா தனது 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், இரண்டு நூற்றாண்டுகள் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் மண்ணில் இந்தியாவின் சுதந்திரக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகின்றன.

100 இசைக்கலைஞர்கள் இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன‘ பாடினர். பிரித்தானிய மண்ணில் ‘ஜன கண மன’ படும் உற்சாகத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்திய இசையமைப்பாளர், மூன்று முறை ‘கிராமி விருது’ வென்ற ரிக்கி கேஜ் அதை செய்தார். 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் இந்த ‘ஜன கண மன’ வீடியோ வெளியிடப்பட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் உணர்ச்சிவசப்படும் ரிக்கி கேஜ், “லண்டனில் உள்ள புகழ்பெற்ற ‘அபே ரோட் ஸ்டுடியோஸ்’ (Abbey Road Studios in London) அரங்கில் ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்த 100 கலைஞர்கள் கொண்ட குழுவுடன் ஜன கண மன பாடலைப் பதிவு செய்தேன். இந்திய தேசிய கீதத்தை பதிவு செய்த மிகப்பெரிய இசைக்குழு இதுவாகும். ஆச்சரியமாக வெளிவந்தது. பாடலின் முடிவில் என் உச்சந்தலை சிலிர்த்தது. இந்திய இசையமைப்பாளராக சிறந்த அனுபவம் பெற்றதாக அவர் கூறினார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version