உலகம்
புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல்: பிரித்தானியா கோபம்
புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல்: பிரித்தானியா கோபம்
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக, பிரான்சுக்கு 500 மில்லியன் டொலர்களை பிரித்தானியா வழங்கியுள்ளது.
500 மில்லியன் பவுண்டுகளையும் வாங்கிக்கொண்டு, பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல் பிரித்தானியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மீன் பிடிக்கும் வலைகள் தண்ணீரில் மூழ்கிவிடாமல் மிதப்பதற்காக, அவற்றின் ஓரங்களில் பந்து போன்ற ரப்பர் மிதவைகளை இணைத்திருப்பார்கள்.
பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய்க்குள் பாயும் Canche என்னும் நதியில், அப்படி சில மிதவைகளை சேர்த்துக் கட்டி, அந்தக் கயிற்றின் இரண்டு ஓரங்களிலும் காங்கிரீட்டாலான கற்களை இணைத்து வைத்துள்ளது பிரான்ஸ் தரப்பு.
அதாவது, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் நோக்கி பயணிக்கும் கடத்தல்காரர்களின் படகுகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையாம்.
500 மில்லியன் பவுண்டுகளையும் வாங்கிக்கொண்டு, பிரான்ஸ் செய்துள்ள இந்த செயல் பிரித்தானியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் Canche நதியில் அமைத்துள்ள தடுப்பு, ஒரு வாத்தைக் கூட தடுக்காது என்று கூறியுள்ள கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Clarke-Smith, இது மொத்த அமைப்பையும் கேலி செய்வது போல் அமைந்துள்ளதுடன், ஆங்கிலக்கால்வாயில் உயிரிழப்புகள் அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது என்று விமர்சித்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த Nigel Mills, பிரான்ஸ் தரப்பு சீரியஸாக எதையும் செய்வதுபோல் தெரியவில்லை, கடத்தல்காரர்கள் பிரான்சின் இந்த செய்கையைக் கண்டால், விழுந்துவிழுந்து சிரிக்கப்போகிறார்கள் என்று கூறியுள்ளார்.
சனிக்கிழமையன்றுதான், பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்ததில், ஆறு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login