உலகம்

கடவுச்சீட்டு, விசா ஏதுமில்லை… பிரித்தானிய விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட தாயாரும் மகளும்

Published

on

கடவுச்சீட்டு, விசா ஏதுமில்லை… பிரித்தானிய விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட தாயாரும் மகளும்

ஸ்பெயின் நாட்டில் இருந்து தான்சானியா செல்லும் வழியில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என குறிப்பிட்டு, தாயார் மற்றும் அவரது 3 வயது மகளை பிரித்தானிய விமான நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

லண்டன் கேட்விக் விமான நிலையம்
தான்சானியாவை சேர்ந்த 29 வயது தாயார் Benadetha Rwehumbiza ஸ்பெயின் நாட்டில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையம் ஊடாக கத்தார் சென்று அங்கிருந்து சொந்த நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

மே 8ம் திகதி லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லண்டனில் இருந்து கத்தார் செல்லும் அவர்களுக்கான இணைப்பு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இன்னொரு விமானத்தில் கத்தார் புறப்படும் வகையில் புதிய போர்டிங் பாஸ்களை இவர்களுக்கு அளித்துள்ளனர். இருப்பினும் புதிய சிக்கல் ஏற்பட்டது.

அதாவது Benadetha-வின் 3 வயது மகள் பிரித்தானியாவில் பிறந்தவர் என்பதால், அவருக்கு பிரித்தானிய கடவுச்சீட்டு இருந்துள்ளது. Benadetha-வுக்கு இல்லை. மட்டுமின்றி, பிரித்தானியாவுக்குள் பயணிக்க போதுமாக ஆவணங்களும் அவரிடம் இல்லை.

இந்த நிலையில், ஹீத்ரோ விமான நிலையம் வந்து சேர்ந்த அவருக்கு நாட்டைவிட்டு வெளியேற 24 மணி நேர அவகாசம் அளித்துள்ளதுடன், மீறினால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் அதிகாரிகளால் எச்சரித்துள்ளனர்.

100 பவுண்டுகள் செலவிட்டு ஹீத்ரோ
கேட்விக் விமான நிலையத்தில் இருந்து 100 பவுண்டுகள் செலவிட்டு ஹீத்ரோ சென்றதாக கூறும் Benadetha, பிரித்தானியாவில் தங்க வேண்டும் என்று தாம் வரவில்லை. இணைப்பு விமானம் ரத்தானதால் ஹீத்ரோ செல்ல வேண்டியிருந்தது என்றார்.

மேலும், உரிய கடவுச்சீட்டு மற்றும் விசா இல்லாமல் லண்டன் தெருவில் அவர்களை அதிகாரிகள் தவிக்க விட்டதாக Benadetha-வின் பிரித்தானிய கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், சட்டவிரோத புலம்பெயர் மக்களை பிரித்தானிய அரசாங்கம் நடத்தும் முறை அவருக்கு தெரியும் என்பதால், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் நெருக்கடியில் அவர் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மொத்த குழப்பத்திற்கும் காரணம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் என குறிப்பிட்டுள்ள Benadetha, கேட்விக் விமான நிலையத்தில் வைத்தே அவர்கள் தங்களை கைவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version