உலகம்

உலகளவில் மாதாந்த சம்பளத்தை அள்ளி கொடுக்கும் முதல் 10 நாடுகள்!

Published

on

உலகளவில் மாதாந்த சம்பளத்தை அள்ளி கொடுக்கும் முதல் 10 நாடுகள்!

உலகம் முழுவதும் சராசரி மாத சம்பளம் பற்றிய புள்ளிவிவரங்களை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி,

உலகம் முழுவதும் உள்ள சுமார் 23 நாடுகளில் சராசரி மாத சம்பளம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

சுவிஸ், லக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து, கத்தார், டென்மார்க், ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் உலகளவில் அதிக மாதாந்திர சராசரி சம்பளம் வழங்கும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, துருக்கி, பிரேசில், அர்ஜென்டினா, இந்தோனேசியா, கொலம்பியா, பங்களாதேஷ், வெனிசுலா, நைஜீரியா, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவை விட குறைவான சராசரி மாத ஊதியம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் இருக்கின்றன.

அண்மையில், நிலவரப்படி தொழிலாளர்களுக்கு மாதாந்திர சராசரி சம்பளம் அதிகம் உள்ள பட்டியலில் இந்தியா 65-வது இடத்தில் உள்ளது.

அதிக மாதாந்திர சராசரி சம்பளம் கிடைக்கும் டாப் 10 நாடுகளின் மாதாந்திர சராசரி சம்பள விவரங்களை இப்பதிவின் மூலமாக பார்க்கலாம்.

சிவிஸ் இந்த பட்டியலில் முதன்மையாக இருக்கும் நாடான சுவிட்சர்லாந்தில் அந்நாட்டு குடிமக்கள், அதிகபட்ச மாதாந்திர சராசரி சம்பளமாக இந்திய மதிப்பில் ரூ.5,03,335 ($6,096) வரை சம்பாதிக்கின்றனர்.

லக்சம்பர்க் நாட்டில் கிடைக்கும் அதிகபட்ச மாதாந்திர சராசரி சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.4,14,121 ஆகும். சிங்கப்பூர் சிங்கப்பூரில் வசிக்கும் தனிநபர்கள் சராசரியாக மாதம் ரூ.4,11,924 ($4,989) வரை சம்பாதிக்கிறார்கள்.

அமெரிக்கா ஒரு அமெரிக்கரின் அதிகபட்ச மாதாந்திர சராசரி சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.3,50,534 ($4,245) ஆகும். ஐஸ்லாந்து இந்த நாட்டில் வசிக்கும் ஒரு தனிநபர் வாங்க கூடிய மாதாந்திர சராசரி சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.3,30,823 ($4,007) ஆகும்.

கத்தார் கத்தார் நாட்டில் தனிநபர்களின் சராசரி மாத சம்பளம் ரூ.3,28,759 ($3,982) ஆகும். டென்மார்க் டென்மார்க்கில் வசிக்கும் மக்களின் மாதாந்திர சராசரி சம்பளம் ரூ.2,92,124 ($3,538) ஆகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்களின் சராசரி மாத சம்பளம் ரூ.2,88,821 ($3,498) ஆக உள்ளது.

நெதர்லாந்து இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள நெதர்லாந்து நாட்டு குடிமக்களின் சராசரி மாத சம்பளம் ரூ.2,88,427 ($3,494) ஆகும்.

அவுஸ்திரேலியா இந்த பட்டியலில் 10-ஆம் இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா, அங்கு வேலை பார்ப்போருக்கு மாதத்திற்கு சராசரியாக ரூ.2,79,925 ($3,391) வரை சம்பளம் அளிக்கிறது.

Exit mobile version