உலகம்

குப்பை லொறியில் சிக்கி மகள் கண்முன்னே தாய் பலி

Published

on

குப்பை லொறியில் சிக்கி மகள் கண்முன்னே தாய் பலி

குப்பை லொறி சக்கரத்தில் சிக்கி மகளின் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரவி மற்றும் வரலட்சுமி (46). இவர்களுக்கு குணாளினி (20) என்ற மகள் உள்ளார்.

தாய் மற்றும் மகள் இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்கள். அதன்படி இருவரும், நேற்று வழக்கம்போல் மொபட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். மகள் குணாளினி மொபட்டை ஓட்டினார். பின்னால் வரலட்சுமி அமர்ந்து சென்றார்.

அப்போது, பூந்தமல்லி – மவுண்ட் சாலையில் காட்டுப்பாக்கம் அருகே சென்ற போது பின்னால் வந்து கொண்டிருந்த குப்பை லொறி மொபட்டின் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி தாய், மகள் இருவரும் கீழே விழுந்தனர்.

அப்போது, கீழே விழுந்த வரலட்சுமி மீது குப்பை லொறியின் சக்கரம் ஏறியது. அப்போது, உடல் நசுங்கி மகள் கண்முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில், மகள் குணாளினி லேசான காயத்துடன் உயிர் தப்பி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, குப்பை லொறி ஓட்டிவந்த டிரைவர் தப்பி ஓடினார். மேலும், இச்சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பை லொறி டிரைவரை தேடி வருகின்றனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version