உலகம்

ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி

Published

on

ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி

சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற ஆறு பேர் சில நாட்கள் இடைவெளியில் உயிரிழந்துள்ளார்கள்.

ஞாயிற்றுக்கிழமை, 47 வயது ஜேர்மானிய உக்ரைனியர் ஒருவர், சுவிட்சர்லாந்தின் இரண்டாவது உயரமான சிகரமான, 14,867 அடி உயரமுடைய Weisshornஇல் ஏறும் முயற்சியின்போது, 1900 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை, சுவிட்சர்லாந்தின் Bernஐச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் Stockhorn மலையிலிருந்து இறங்கும்போது, வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மேலும், 26 வயது பிரான்ஸ் நாட்டவர் ஒருவரும், 36 வயது நெதர்லாந்து நாட்டவர் ஒருவரும் 3,450 மீற்றர் உயரமுடைய Aiguille du Tour என்னும் மலையில் ஏறும்போது பனிப்பாறைச் சரிவில் சிக்கியுள்ளார்கள். அவர்கள் இருவரும் திங்கட்கிழமை உயிரிழந்துவிட்டதாகவும், காயமடைந்த 22 வயது நெதர்லாந்து நாட்டவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, சூரிச்சைச் சேர்ந்த 37 வயது ஆண் ஒருவரும், 33 வயது பெண் ஒருவரும் Lagginhorn என்னும் மலையில் 13,000 அடி உயரத்தை எட்டிய நிலையில், 200 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்கள்.

சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற ஆல்ப்ஸ் மலையில், சில நாட்களில் ஆறு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ள விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version