உலகம்

கண்டிப்பாக செய்வோம்… ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் அதிரடி

Published

on

கண்டிப்பாக செய்வோம்… ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் அதிரடி

வாக்னர் கூலிப்படைக்கு தற்போது ஆள் சேர்க்கும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் செய்வோம் என எவ்ஜெனி பிரிகோஜின் கூறியுள்ளார்.

ஜூன் மாத இறுதியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக கிளர்ச்சியை முன்னெடுத்ததிலிருந்து வாக்னர் கூலிப்படையின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. வாக்னர் கூலிப்படையின் ஒரு பிரிவு, உக்ரைனில் தீவிரமான சண்டையை முன்வைத்தவர்கள் என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, கிளர்ச்சிக்கு பின்னர், இவர்கள் பெலாரஸ் நாட்டிற்கு இடம்பெயரும் நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், கிளர்ச்சிக்கு பின்னர் 5 நாட்களில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் நேரடி சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், ஆப்பிரிக்க தலைவர்களுடனான உச்சி மாநாட்டில் எவ்ஜெனி பிரிகோஜின் காணப்பட்டதாக புகைப்பட ஆதாரங்களும் வெளியானது. இந்த நிலையில் தான் குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள எவ்ஜெனி பிரிகோஜின்,

எங்களது அடுத்த பணிகளை இன்று நாங்கள் வரையறுக்க இருக்கிறோம், ரஷ்யாவின் பெருமையை அது நிலைநாட்டும் என்றார். முன்னதாக ஜூன் கிளர்ச்சிக்கு பின்னர், வாக்னர் கூலிப்படையினர் கிளர்ச்சியில் ஈடுபடாதவர்கள் தேசிய ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும்,

பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் முன்னெடுக்கப்படும் எனவும் ரஷ்யா அறிவித்திருந்தது. இந்த நிலையில், எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவிக்கையில், துரதரிஷ்டவசமாக வாக்னர் போராளிகளில் சிலர் மற்ற அதிகார அமைப்புகளுக்கு நகர்ந்து விட்டனர்,

ஆனால் அவர்கள் திரும்பி வர விரும்புவதாக அவர் கூறியுள்ளார். தற்போதைய சூழலில், ஆட்கள் பற்றாக்குறை இல்லை எனவும், ஆனால் எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் ஆட்சேர்ப்பு பணிகளை முடுக்கிவிடவும் தயாராக இருப்பதாக எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version