உலகம்

ஏரியில் குதித்த நபர் மின்சாரம் தாக்கி பலி! நீடிக்கும் மர்மம்

Published

on

ஏரியில் குதித்த நபர் மின்சாரம் தாக்கி பலி! நீடிக்கும் மர்மம்

அமெரிக்காவில் ஏரி ஒன்றில் குதித்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான நிலையில், அவர் மீது எப்படி மின்சாரம் பாய்ந்தது என்பது மர்மமாகவே நீடிக்கிறது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்திலுள்ள Lake Lanier என்னும் ஏரியில்தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 24 வயது இளைஞர் ஒருவர் ஏரியில் குதித்த அடுத்த கணம், அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாகஅதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த ஏரியின் பின்னணியில் பெரிய கதை இன்று உள்ளது. Lanier ஏரி ஒரு செயற்கை ஏரியாகும். அதாவது, மக்கள் வாழ்ந்த ஒரு இடத்தை காலி செய்து, அந்த இடத்தை ஆற்று நீரால் நிரப்பி அந்த ஏரியை செயற்கையாக உருவாக்கினார்களாம்.

அதற்காக அங்கு வாழ்ந்த சுமார் 250க்கும் அதிகமான குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனவாம். ஏரியை தண்ணீரால் நிறைத்தாலும், அதன் அடியில் இன்னமும் வீடுகள் அப்படியே உள்ளனவாம்.

எல்லாவற்றிற்கும்மேல், அங்கிருந்த 29 கல்லறைகள் அப்படியே தண்ணீருக்கடியில் உள்ளனவாம். ஆக, அந்த ஏரி குறித்து பல திகில் கதைகள் உலாவுகின்றனவாம்.

Exit mobile version