உலகம்

பிரான்சில் நடுங்கவைக்கும் சம்பவம்! சாலையில் மரணமடைந்த பிரித்தானிய பெண்!

Published

on

பிரான்சில் நடுங்கவைக்கும் சம்பவம்! சாலையில் மரணமடைந்த பிரித்தானிய பெண்!

வடக்கு பிரான்ஸில் மூன்று வாகனங்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி, பிரித்தானிய பெண் உட்பட மூவர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

லென்ஸ் பகுதியின் தெற்கே ஞாயிறன்று மதியத்திற்கு மேல் A26 பிரதான சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் சிறார்கள் உட்பட ஐவர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 40 வயதான பிரித்தானிய பெண்மணி ஒருவருடன், 75 வயது பெண்மணி ஒருவரும், 45 வயது ஆண் ஒருவரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், காயமடைந்துள்ள சிலர் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது. சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பிரதான சாலையின் ஒரு பகுதியில் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசர சேவைகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மட்டுமின்றி, சுமார் 60 தீயணைப்பு வீரர்களும் இரண்டு ஹெலிகொப்டர் சேவையும் சம்பவயிடத்திற்கு வ்ரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய பெண்  சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாகவும், இன்னொரு வாகனத்தில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆறு மற்றும் 48 வயதுடைய பயணிகள் காம்ப்ராய் மற்றும் அராஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய வாகனத்தில் ஒன்று 7 பேர் கொண்ட பிரித்தானிய குடும்பத்தினருக்கு பயணித்துள்ளது. இரண்டாவது வாகனத்தில் 75 வயது பெண்மணி மற்றும் 45 வயது ஆண் ஒருவருடன், நான்கு பேர் பயணித்துள்ளனர்.

இந்த நால்வரில் இருவர் சம்பவயிடத்தில் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எஞ்சிய இரு பயணிகள், 14 வயது சிறுவன் மற்றும் 79 வயது ஆண் ஒருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய மூன்றாவது வாகனத்தில் 3 சிறார்கள் உட்பட நான்கு பயணிகள் சென்றதாகவும், இவர்களின் வயது ஆறு முதல் 33 வயது எனவும் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 Comment

  1. Pingback: பெண் ஊடகவியலாளர்கள் ஏன் மேலாடையின்றி வரவில்லை? எழுந்த சர்ச்சை - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version