உலகம்
கடனைக் கட்ட வங்கி ஊழியர் தொந்தரவு! கணவர் தற்கொலை
கடனைக் கட்ட வங்கி ஊழியர் தொந்தரவு! கணவர் தற்கொலை
வங்கியில் வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாததால் விரக்தியில் மனைவிக்கு போன் செய்து விட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம், தமிழகத்தில் உள்ள சென்னை காசிமேடு விநாயகபுரம் 1-வது பகுதியைச் சேர்ந்த ரகுமான்(38) என்பவரும், சாமுண்டீஸ்வரி என்பவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர், எவர்சில்வர் பட்டறையில் பாலிஸ் போடும் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனை மாத தவணையாக 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தார். இந்நிலையில், சரியாக வேலை இல்லாத காரணத்தினால் சில மாதங்களாக பணத்தை செலுத்த முடியவில்லை.
அதனால், வங்கி ஊழியர்கள் ரகுமானின் வீட்டிற்கு வந்து பணத்தை தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, ரகுமான் தனது மனைவிக்கு போன் செய்து, வங்கி ஊழியர்கள் பணத்தை தருமாறு மிரட்டி வருகின்றனர். குழந்தைகளையும், குடும்பத்தையும் பார்த்து கொள். நான் தூக்கிட்டு தற்கொலை செய்ய போகிறேன் எனக் கூறி போனை கட் செய்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி பக்கத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து பார்க்கும் படி கூறியுள்ளார். அவர்கள், அங்கு சென்று பார்த்த போது, ரகுமான் மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனிடையே, ரகுமான் உறவினர்கள், வங்கி கடனை திருப்பி செலுத்துமாறு மிரட்டல் கொடுத்த ஊழியர்களிடம் பணம் ரெடியாக இருக்கிறது, வாங்கிக் கொள் என கூறியுள்ளனர்.
அதை வாங்க ஊழியர்கள் வந்த போது, அவர்களை பிடித்து காசிமேடு பொலிசில் ஒப்படைத்தனர். இது பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: என் மகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்! குஷ்புவின் பதிவு - tamilnaadi.com