இந்தியா

இந்தியாவின் முதல் பணக்கார எம்எல்ஏ யார் தெரியுமா? டாப் 20 எம்எல்ஏக்கள்

Published

on

இந்தியாவின் முதல் பணக்கார எம்எல்ஏ யார் தெரியுமா? டாப் 20 எம்எல்ஏக்கள்

இந்தியாவில் முதல் பணக்கார எம்எல்ஏ மற்றும் ஏழை எம்எல்ஏ உள்பட டாப் 20 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஒரு அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பணக்கார எம்.எல்.ஏ
Association of Democratic Reforms என்ற அமைப்பானது இந்தியாவின் முதல் 20 பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களையும், முதல் 20 ஏழை சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த கர்நாடக எம்எல்ஏ டி.கே.சிவகுமார் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி ஆகும். அதுமட்டுமல்லாமல், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களிலும் கர்நாடக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த பட்டியலில் ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை.

பணக்கார எம்.எல்.ஏக்கள் பட்டியல்
இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏக்கள் பட்டியலில் உள்ள 12 பேர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 14 சதவீதம் பேர் பில்லியனர்களாக உள்ளனர். குறைந்தபட்சமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட எம்.எல்.ஏக்கள் கர்நாடகாவில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலம், கனகபுரா சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ டி.கே. சிவக்குமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்பை வைத்து முதல் இடத்தில் உள்ளார்.
கர்நாடகா மாநிலம், கௌரிபிதனூர் சட்டமன்ற தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ கே.ஹெச். புட்டஸ்வாமி கவுடா ரூ.1,267 கோடி சொத்து மதிப்பை வைத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
கர்நாடகா மாநிலம், கோவிந்தராஜநகர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியகிருஷ்ணா ரூ.1,156 கோடி சொத்து மதிப்பை வைத்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், குப்பம் சட்டமன்ற தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ என் சந்திரபாபு நாயுடு ரூ.668 கோடி சொத்து மதிப்பை வைத்து நான்காம் இடத்தில் உள்ளார்.
குஜராத் மாநிலம், மான்சா சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ ஜெயந்திபாய் சோமாபாய் படேல் ரூ.661 கோடி சொத்து மதிப்பை வைத்து ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
கர்நாடகா மாநிலம், ஹெப்பல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சுரேஷ் பிஎஸ் ரூ.648 கோடி சொத்து மதிப்பை வைத்து ஆறாம் இடத்தில் உள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், புலிவெந்த்லா சட்டமன்ற தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெகன் மோகன் ரெட்டி ரூ.510 கோடி சொத்து மதிப்பை வைத்து ஏழாம் இடத்தில் உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், காட்கோபர் கிழக்கு சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ பராக் ஷா ரூ.500 கோடி சொத்து மதிப்பை வைத்து எட்டாம் இடத்தில் உள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், அம்பிகாபூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ டி.எஸ். பாபா ரூ.500 கோடி சொத்து மதிப்பை வைத்து ஒன்பதாம் இடத்தில் உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மலபார் ஹில் சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ மங்கள் பிரபாத் லோதா ரூ.441 கோடி சொத்து மதிப்பை வைத்து பத்தாம் இடத்தில் உள்ளார்.
ஏழை எம்.எல்.ஏக்கள் பட்டியல்
மேற்கு வங்க மாநிலம், சிந்து சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ நிர்மல் குமார் தாரா ரூ.1,700 சொத்து மதிப்பை வைத்து முதல் இடத்தில் உள்ளார்.
ஒடிசா மாநிலம், ராயகடா சட்டமன்ற தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ மகரந்த முதுலி ரூ.15,000 சொத்து மதிப்பை வைத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பஞ்சாப் மாநிலம், ஃபசில்கா சட்டமன்ற தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரிந்தர் பால் சிங் சவ்னா ரூ.18,370 சொத்து மதிப்பை வைத்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
பஞ்சாப் மாநிலம், சங்ரூர் சட்டமன்ற தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரிந்தர் கவுர் பராஜ் ரூ.24,409 சொத்து மதிப்பை வைத்து நான்காம் இடத்தில் உள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம், ஜுக்சலை சட்டமன்ற தொகுதி JMM எம்.எல்.ஏ மங்கள் கலிந்தி ரூ.30,000 சொத்து மதிப்பை வைத்து ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், நபத்விப் சட்டமன்ற தொகுதி AITC எம்.எல்.ஏ புண்டரிகாக்ஷ்ய சாஹா ரூ.30,423 சொத்து மதிப்பை வைத்து ஆறாம் இடத்தில் உள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், சந்திராபூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராம் குமார் யாதவ் ரூ.30,464 சொத்து மதிப்பை வைத்து ஏழாம் இடத்தில் உள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், சித்ரகூட் சட்டமன்ற தொகுதி சமாஜ்வாடி எம்.எல்.ஏ அனில் குமார் அனில் பிரதான் ரூ.30,496 சொத்து மதிப்பை வைத்து எட்டாம் இடத்தில் உள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம், பந்தனா சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராம் டாங்கோர் ரூ.50,749 சொத்து மதிப்பை வைத்து ஒன்பதாம் இடத்தில் உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், தஹானு சட்டமன்ற தொகுதி சிபிஎம்ஐ எம்.எல்.ஏ வினோத் பிவா நிகோல் ரூ.51,082 சொத்து மதிப்பை வைத்து பத்தாம் இடத்தில் உள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version